"ஆயுத பூஜையும் -ஆட்டோக்காரர்களும்"- ஒரு அலசல்

 
Published : Oct 09, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
"ஆயுத பூஜையும் -ஆட்டோக்காரர்களும்"- ஒரு அலசல்

சுருக்கம்

ayudapoojaiyum - autokaarargalum

ஆயுத பூஜையும், 'ஆட்டோக்காரர்களும் '

               'பண்டிகை' என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான்.அதிலும் ஒரு சில பண்டிகைகள் நமது உள்ளங்களை தட்டி செல்லும் .அப்படி பட்ட ஒரு பண்டிகை பற்றி தான் நாம் இப்போது  பார்க்க போகின்றோம் .

'செய்யும்  தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப நாம் தெய்வமாக  நினைக்கும்  தொழில்களுக்கு வழிபடுகின்ற நல்லநாளே 'ஆயுத பூஜை'   என்னும் அற்புத திருநாளாகும் .அந்த அற்புத திருநாளின் போது அவரவர்கள் தங்கள் ஆயுதங்களுக்கும் ,உதாரணமாக விவசாயிகள் அவர்களது ஏர்கலப்பைகளுக்கு பூஜை செய்து விவசாயம் செழித்து வரவேண்டும் என வழிபாடு செய்வார்கள் அது போல   இன்னும் நிறைய  சொல்லி கொன்டே போகலாம்.

பொதுவாக நமக்கு ஒரு விஷயம் சொன்னதும் பளிச்சென்று  ஞபாகம்  வரும் அது போல ஆயுத பூஜை என்றாலே நமக்கு நினைவில் வருவது ஆட்டோக்காரர்கள் தான்.நம்ம சூப்பர்  ஸ்டார்  'நான் ஆட்டோக்காரன் ' என்ற பாட்டுக்கு  அவர் ஆடின பாட்ஷா  பட  பாடல் தான் ஒவ்வொரு ஆயுத பூஜைக்கும் போடப்படும் பாடலாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் அவர்கள் தெய்வமாக நினைக்கும் ஆட்டோவிற்கு  பூஜை  செய்யும் அழகே தனி . 

அந்த நன்னாளில் அவர்களது வாகனத்திற்கு  இருபுறமும் வாழைக்கன்று வைத்து ,பூ ,பொறி போன்றவற்றையும் வைத்து  பூஜை செய்யும் அழகு இருகிறதே,

நம் கூகிள் மேப்பில் வழிகேட்போமோ  இல்லையோ ஆனால்  ஆட்டோக்காரர்களிடம் கண்டிப்பாக வழி கேட்போம் . அது போலவே ஆயுத பூஜை அன்று நம் கண்ணில் படுவதோ அல்லது நினைவில் வருவோதோ ஆட்டோக்காரர்கள் என்று சொல்வதில் ஆச்சரியமில்லை.

ஆயுதப்பூஜை அன்றே பூஜை போட வேண்டும் என்ற  அவசியம் இல்லாமல், அதற்காக  ஒரு குறிப்பிட்ட  நாளை தேர்வு  செய்து, அனைத்து ஆட்டோக்காரர்களும்  ஒன்றாக இணைந்து ஆயுத பூஜை செய்யும் அழகே அழகு தான்

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை