வீட்டிலேயே முகத்தை ப்ளீச் செய்யலாம் வாங்க..! 5 நிமிடம் போதும்..!

By thenmozhi gFirst Published Oct 24, 2018, 2:57 PM IST
Highlights

வெயில் காலம் மட்டுமின்றி, சாதாரணமாகவே நம் முகத்தில் மிக எளிதில் கரும் புள்ளிகள் தோன்றும், வெளியில் சென்று வேலை செய்யும் நம்மவர்களுக்கு, முகத்தில் மிகவும் எளிதாக கருமை நிறம் படியும்.இதனை நீக்க, வீட்டிலேயே எளிய  முறையில் ப்ளீச் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
 

வெயில் காலம் மட்டுமின்றி, சாதாரணமாகவே நம் முகத்தில் மிக எளிதில் கரும் புள்ளிகள் தோன்றும், வெளியில் சென்று வேலை செய்யும் நம்மவர்களுக்கு, முகத்தில் மிகவும் எளிதாக கருமை நிறம் படியும். இதனை நீக்க, வீட்டிலேயே எளிய  முறையில் ப்ளீச் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

உருளை கிழங்கு நன்றாக அரைத்து, அதனை முகத்தில் பூசி ஒரு 15 நிமிடம் அப்படியே விட்டுவிடலாம் பின்னர் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

ஆலம் விழுது பொடி மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு கலந்து நீரில் ஊற வைத்து, அந்த நீரை கொண்டு  முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் பளீச்சென்று இருக்கும்.
 
வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகம் பிரகாசமாக இருக்கும்.

பச்சை வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளப்பளப்பாகவும் புத்துணர்ச்சி  உடனும் இருக்கும்.

 

click me!