1 மணி நேரத்தில் லைசென்ஸ் நம்ம கையில்..! தமிழக அரசு அதிரடி..!

Published : Jun 10, 2019, 06:20 PM ISTUpdated : Jun 10, 2019, 06:23 PM IST
1 மணி நேரத்தில் லைசென்ஸ் நம்ம கையில்..!  தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆர்.டி.ஓக்களில் ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆர்.டி.ஓக்களில் ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை, மதுரை, சேலம், திருச்சி, உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆட்சி புத்தகத்தின் நகல், ஓட்டுனர் உரிமம் பெறுவது, பெயர் மாற்றம், ஓட்டுநர் பயிற்சி என பல்வேறு விதமான செயல்பாடுகள் நடந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது வாகன உரிமை மாற்றம் செய்தல். தகுதி சான்று புதுப்பித்தல். தவணை ரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளும் கூடுதலாக செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம்... இது தொடர்பான அனைத்து பணிகளும் மிக எளிதாக இணையதளத்தில் செய்யக்கூடியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் ஒரு பகுதியாக ஓட்டுநர் உரிமம் பெற வரும் விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு மணி நேரத்திற்குள் லைசென்ஸ் வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைத்து பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துணை கமிஷனர் சமயமூர்த்தி தெரிவிக்கும் போது, "ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கணினி சார்ந்த விஷயங்கள் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது போக்குவரத்து அலுவலகங்கள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டதால் மற்ற அலுவலகத்தில் இருந்து பெறக்கூடிய என்ஓசி பெற வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்கின்றது. எனவே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், இமெயில் மற்றும் மொபைல் எண்ணை தவறாமல் குறிப்பிட்டு இருந்தால் போதுமானது. மேலும், லைசன்ஸ் எடுக்கும்போது, புகைப்படம் எடுத்து அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் இது குறித்த விவரங்கள் அடங்கிய ஓட்டுனர் உரிமத்தை உடனடியாக வழங்க உள்ளது

இதற்கு முன்னதாக விண்ணப்பித்து சில நாட்கள் கழித்தே, ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் சூழல் நிலவி வந்தது. ஆனால் கணினி மயமாக்கப்பட்டதால் மிக எளிதில் அதுவும் ஒரு மணி நேரத்திலேயே இனி ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என்ற செய்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்