ஏமாந்தது தமிழகம்..! அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமாம்..!

By ezhil mozhiFirst Published Jun 10, 2019, 4:36 PM IST
Highlights

தென்மேற்கு பருவ மழையால் வழக்கத்தை விட இந்த ஆண்டு குறைவான மழையே தமிழகத்திற்கு கிடைக்கும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏமாந்தது தமிழகம்..! அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமாம்..! 

தென்மேற்கு பருவ மழையால் வழக்கத்தை விட இந்த ஆண்டு குறைவான மழையே தமிழகத்திற்கு கிடைக்கும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு  அனல் காற்றுய் வீசும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

அதே வேளையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் மீனவர்கள் அரபிக்கடலுக்குள் மீன்  பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும், தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில், அதாவது  நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தின் உள்மாவட்டங்களான மேற்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, அதிக வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை என பல பிரச்சனை இருக்கும் போது, தென் மேற்கு பருவமழை வந்தால் தான் தமிழகம் கொஞ்சம் தாக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த  நிலையில் தென்மேற்கு பருவ மழையினால் தமிழகத்திற்கு வழக்கத்தை விட குறைவான மழையே கிடைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையயம் தெரிவித்து உள்ளது மக்களிடேசியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

click me!