ஜாதி மதம் இனம் வேறுபாடு இன்றி, நம் மக்கள் ஒற்றுமையாக யோசிக்கும் ஒரு விஷயம்என்னவென்றால் நல்ல நேரம் எது? கெட்ட நேரம் எது ? என எதை செய்தாலும் அதற்குமுன் இத்குபோன்ற நேரம் காலத்தை பார்த்து தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படியென்றால், எது நல்ல நேரம் ? நாம் ஒரு நல்ல செய்தியை கேட்டால், நமக்கே தோன்றும் நல்லது நடக்கிறது என்று, அதே போன்று நம் மனது நோகும் வகையில் கெட்ட செய்திகளை கேட்டால், நேரம் சரியில்லை என்று நாமே சொல்கிறோம் அல்லவா? எது நல்ல நேரம் ? நல்லதை நினைக்கும் போது நல்லதை பார்க்கும் போதுநல்லதை கேட்கும் போது நல்லதை பேசும் போதுநல்லதை பேசும் போது எது இராகு காலம் ?அகங்காரம் கொள்ளும் நேரம்பாசம் கண்களை மறைக்கும் நேரம்ஆசைகள் எல்லையை மீறும் நேரம்கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம் எது குளிகை ?கவலைப்படும் நேரம்பயப்படும் நேரம்கலங்கும் நேரம்முயலாத நேரம் எது எமகண்டம் ?பொறாமைப்படும் நேரம்புறம் கூறும் நேரம்கோள்சொல்லும் நேரம்சதி செய்யும் நேரம் எது பிரம்மமுகூர்த்தம் ?தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்கடமையில் வழுவாத நேரம்அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம் எதுசுபமுகூர்த்தம் ?சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்மேற்குறிப்பிட்ட அனைத்தும் நம் வாழ்கையில் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷியம் தான். அதாவது நாம் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து வந்தால், அந்த நேரம் நல்லதாக தான் இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்