தற்போது வைரலாக பரவி வரும் ஜிமிக்கி கம்மல் பாடல், தமிழக வாலிபர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்தப் பாடல் மலையாள திரைப்படமான வெளிப்படிண்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்றது. வினித் ஸ்ரீனிவாசன், ரெஞ்சித் உன்னி ஆகியோர் பாடிய இந்தப் பாடலை ஷான் ரெஹ்மான் இசையமைத்திருந்தார். இது கேரளத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்ற பாடல்.இப்பாடலுக்கு இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவிகள் ஆடி, அதை வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் ஏற்றினர். யூடியூப்பில் முதல் இரு நாட்களில் 5 லட்சம் பார்க்கப்பட்ட இந்தப் பாடலை பலரும் பகிர்ந்து கொண்டதில், ஒரு வாரத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.இந்தப் பாடலில் முன்னணியில் இருந்து நடனமாடும் இரு பெண்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் படு ஃபேமஸ்... அவர்களின் முகங்கள் இப்போது பாப்புலராகிவிட்டன. பேஸ்புக்கிலும் பரவலாக இந்த லிங்க்கள் பகிரப் படுகின்றன. இது தமிழ்ப் பாடலாகவும் பதியப் பெற்று பேஸ்புக்கில் உலாவருகிறது...மேலும் மலையாள படத்தின் பாடலாக இது இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் தான் இந்த பாடலுக்கான, மாணவிகளின் நடனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது