முகப்பரு உங்களை வாட்டி வதைக்குதா..? இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்..!

By ezhil mozhiFirst Published Oct 19, 2019, 8:13 PM IST
Highlights

முகப் பருவால் வரக் கூடிய மார்க் நீங்க, மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனை பெற்று அதனை நீக்கி விடலாம் அல்லது மஞ்சளை விட அதிக மருத்துவ குணம் கொண்டது வேறு எதுவும் இருக்க முடியாது என்றே கூறலாம்.. 

முகப்பரு உங்களை வாட்டி வதைக்குதா..? இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்..! 

நம் முகத்தின் அழகை கெடுப்பதே முகப்பரு தான்..அப்படின்னு சொல்லிவிட முடியாது....ஏனென்றால் பருவத்தில் வருவது பரு. அது முகத்தில் வருவதால் முகப்பரு அவ்வளவு தான்...

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றத்தால் அதிக முகப்பரு வருவது வழக்கம்

மலச்சிக்கல்

வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்

தலையில் அதிக பொடுகு இருப்பது

ஹார்மோனல் பிரச்சனை என இவை அனைத்தும் முகப்பரு வருவதற்கான காரணங்கள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே...

சரி இவ்வாறு வரும் முகப்பருவை தடுக்க சில வழிகள் மேற்கொண்டாலும்..அது வந்தே தீரும் என்பது தான் உண்மை...  ஒரு சிலருக்கு முகப்பரு இருக்கவே இருக்காது....பார்பதற்கு  அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களுடைய முகத்தை பார்க்கும் போது... இது போன்றவர்களுக்கு இயற்கையிலேயே இது போன்ற ஜீன்களை கொண்டவர்கள் மற்றும் ஹார்மோன்ஸ் சரியான அளவில் அவர்களுக்கு இருப்பதும் ஒரு காரணமாக கூறலாம்....

சரி வாங்க முகப்பரு வந்தால் அதனை எப்படி கையாள வேண்டும் என்பதை பார்க்கலாம்....

எப்ப பார்த்தாலும் அந்த பருவை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே இருப்பது கூடாது

பருவினை அழுத்தி உடைத்து எடுத்தல் கட்டாயம் செய்யவே கூடாது

பருவை விரலால் எந்த அளவிற்கு அழுத்தி அதனை வெளியேற்றுகிறோமோ அந்த அளவிற்கு அப்படியே பள்ளம் தோன்றும்...இதனை சில பேரின் முகத்தில் பார்த்தாலே தெரியும்.. ஏதோ பள்ளம் பள்ளமாக உள்ளதே என்று....

பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

மேலும் முகப் பருவால் வரக் கூடிய மார்க் நீங்க, மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனை பெற்று அதனை நீக்கி விடலாம் அல்லது மஞ்சளை விட அதிக மருத்துவ குணம் கொண்டது வேறு எதுவும் இருக்க முடியாது என்றே கூறலாம்.. இந்த மஞ்சளை கூட நம் முகத்தில் அடிக்கடி தடவி வந்தால், முகப்பரு வருவது மிகவும் குறைந்து விடும் மற்றும் பரு வந்ததற்கான அடையாளங்கள் அவ்வளவாக இருக்காது என்பது உண்மை.

click me!