மகத்தான மஞ்சளின் மகிமை..! தெரியுமா இந்த ரகசியம்...?

By ezhil mozhiFirst Published Oct 19, 2019, 7:13 PM IST
Highlights

வெறும் வயிற்றில் சிறிதளவு மஞ்சள் உட்கொண்டாலும் வயிற்றை சுத்தப்படுத்தும். பாலில் மஞ்சள் கலந்து தினமும் அருந்தி வந்தால் குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும். மற்ற பக்கவிளைவுகளையும் தடுக்கும்.

மகத்தான மஞ்சளின் மகிமை..! தெரியுமா இந்த ரகசியம்...?

மஞ்சளின் மகிமையை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு குறைந்த எண்ணிக்கையில் அல்ல.... ஏராளமான நன்மைகள் உள்ளது. அதில் மிக முக்கிய பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் மிக எளிதாக மூக்கடைப்பு ஏற்படும்.இதில் சிரமப்படுபவர்கள் மிளகு தேன் மஞ்சள் வேப்பிலை இவற்றை எல்லாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணம்... தேவையான அளவிற்கு மிளகை எடுத்து அதனை பொடி செய்து தேனில் கலந்து இரவு ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் இதை சாப்பிடும் போது சிறிது மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனைக் கொடுக்கும்.

இதே போன்று வெறும் வயிற்றில் சிறிதளவு மஞ்சள் உட்கொண்டாலும் வயிற்றை சுத்தப்படுத்தும். பாலில் மஞ்சள் கலந்து தினமும் அருந்தி வந்தால் குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும். மற்ற பக்கவிளைவுகளையும் தடுக்கும்.

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை மிக எளிதாக எதிர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது மஞ்சள். எனவே தொண்டை பிரச்சனை ஏதாவது ஏற்பட்டாலும் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது மிகவும் நல்லது. இதேபோன்று நெஞ்சு சளி சைனஸ் பிரச்சினைகளுக்கு மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம். எலும்புகளில் உண்டாகும் வலியை போக்க மஞ்சள் கலந்த பால் மிகவும் பலன் கொடுக்கும்.தண்டுவடம் எலும்பு இவை அனைத்தையும் வலிமை கொண்டதாக மாற்றும்.

இதே போன்று தொடர்ந்து பல நாட்கள் வறட்டு இரும்பல் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தொடர்ந்து பருகி வந்தால் போதுமானது வறட்டு இரும்பல் வரவே வராது.

click me!