பதப்படுத்தப்படும் பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...! 38% தரமற்றது...அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published Oct 19, 2019, 5:34 PM IST
Highlights

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை கொண்டு கொண்டு சோதனை செய்த போது, அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மூலமாக பாலில் ரசாயன பொருள் கலந்து உள்ளதாக தெரிவித்தார்.
 

பதப்படுத்தப்படும் பாலிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள்...! 38% தரமற்றது.. அதிர்ச்சி தகவல்..!  

நாடு முழுவதும் 1,103 நகரங்களில் இருந்து பெறப்பட்ட 6,432 பால் மாதிரிகளை கொண்டு சோதனை செய்தது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். 

ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு பேசிய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் அகர்வால்..

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை கொண்டு கொண்டு சோதனை செய்த போது, அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மாட்டுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மூலமாக பாலில் ரசாயன பொருள் கலந்து உள்ளதாக தெரிவித்தார். இது தவிர கொழுப்புகள்,சர்க்கரை உள்ளிட்ட மூலக்கூறுகள் அதிக அளவில் சேர்த்து  உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது 38 சதவீத பதப்படுத்தபட்ட பால் தரமற்றதாக உள்ளது.

எனவே விதிகளின் படி பால் தயாரிப்பு இருக்க வேண்டும் என்றும் விதிகளுக்கு ஏற்ப தரமான பாலை தயாரிக்க ஜனவரி 1ம் தேதிவரை கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரும் விதிமுறை மீறி தரமற்ற பாலை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். 

click me!