தாம்பத்யத்தில் ஆண்கள் இப்படி ஒரு தவறை செய்வது உண்மையா..?

Published : Oct 19, 2019, 07:38 PM IST
தாம்பத்யத்தில் ஆண்கள் இப்படி ஒரு தவறை செய்வது உண்மையா..?

சுருக்கம்

மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு, எப்போது தாம்பத்தில் ஈடுபடுவோமோ என்ற ஆவல் இருந்தால், மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும்.

தாம்பத்யத்தில் ஆண்கள் இப்படி ஒரு தவறை செய்வது உண்மையா..? 

திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில தம்பதியினருக்கு இந்த விஷயத்தில் ஏற்படும் சில கருத்து வேறுபாடு காரணமாக கூட டைவர்ஸ் வரை சென்று விடுகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் திருமணம் முடிந்த பின் முதல் இரவிலேயே கூட இருவருக்கும் தவறான புரிதலைகள் ஏற்படும். அதற்கு சில காரணம் சொல்ல முடியும்.

புதுமண தம்பதிகள்..!

முதலிரவின் போது, ஆண்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா ? மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு, எப்போது தாம்பத்தில் ஈடுபடுவோமோ என்ற ஆவல் இருந்தால், மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும். பல சந்தேகங்களையும் எழுப்பும்.. இதில் இப்படி ஒரு ஆவல் என்றால்,பேசுவதற்கு இடமே இல்லையா என்ற சிந்தனை மேலோங்கும்

முதலில் மனைவியிடம் அன்பா பேசி, பாசமாக  நாலு வார்த்தை சொன்னால் தான் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும். அதே போன்று எந்த வித போர்ப்ளே இல்லாமல் நேரடியாக தாம்பயத்தில் ஈடுபட்டால் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காதாம்...

அன்பாக கட்டி பிடித்து பாசமாக முத்தமிட்டு இப்படியே அரை மணி நேரமாவது இருந்தால், பெண்கள் அன்பை உணர்வார்களாம். அதே போன்று மனைவியிடம் இது ஓகே வா, அது ஓகே வா என பேசிக்கிட்டே இருந்தாலும் பிடிக்குமாம். இது போன்று எதையும் செய்யாத ஆண்களை பெண்கள் கொஞ்சம் வெறுக்கத்தான் செய்வார்களாம். 

வாழ்க்கையில் இதெல்லாம் தான் முக்கியமா என்றால்..? இதுவும் முக்கியம் தான் என்கிறது வாழ்க்கையின் எதார்த்தம்...குறிப்பாக புதுமண தம்பதிகள் இது போன்ற விஷயங்களில் பார்த்து நடந்துக்கொள்வது நல்லது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!