டூத் பேஸ்டை இதுக்கு கூட பயன்படுத்தலாமா?! அட ச்சே.. இது தெரியாம போச்சே.!

By Kalai SelviFirst Published Aug 31, 2024, 4:05 PM IST
Highlights

Uses For Toothpaste : டூத் பேஸ்ட் பற்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல அதிசயங்களையும் செய்யும் தெரியுமா? 

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் காரியம் பல் துலக்குவது. டூத் பேஸ்ட் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் ஒரு நல்ல பிராண்டில் டூத் பேஸ்ட் பயன்படுத்தினால், அது நம்முடைய பற்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும், ஈறுகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். ஆனால், டூத் பேஸ்ட் பற்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல அதிசயங்களையும் செய்யும் தெரியுமா? ஆம், நாம் பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட் பல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இது குறித்து விரிவாக இங்கு நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க: டூத் பேஸ்ட் வாங்க போறீங்களா..? ப்ளீஸ்.. 'கலர் மார்க்' பாத்து வாங்குங்க ஏன் தெரியுமா..?

Latest Videos

டூத் பேஸ்ட் பயன்படுத்துவதற்கான பல வழிகள் இங்கே : 

1. நகைகளை சுத்தம் செய்ய :

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை, நகைகளில் தடவவும். பிறகு நகைகளை காட்டன் துணி வைத்து சுத்தம் செய்யவும். இப்படி செய்தால், நகைகள் பளபளக்கும்.

2. டைல்ஸ் சுத்தம் செய்ய : 

வீடு மற்றும் பாத்ரூமில் இருக்கும் டைல்ஸ்சை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டில் வெதுவெதுப்பான நீரைக் கலந்து, அந்த பேஸ்ட்டை டைல்ஸ் மீது தடவி, சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப் மூலம் தேய்க்கவும். இப்படி செய்தால், டைல்ஸ் பளபளக்கும்.

3. துளைகளை அடைக்க :

உங்கள் வீட்டின் சுவர்களில் துளைகள் இருந்தால், அவற்றை அடைக்க துளைகளில் டூத் பேஸ்ட் கொண்டு அடைக்கவும். டூத் பேஸ்ட் காய்ந்த பிறகு துளைகள் முழுமையாக மூடிவிடும். 

4. குழாயை சுத்தம் செய்ய :

டூத் பேஸ்ட் மற்றும் வெள்ளை வினிகர் இரண்டையும் நன்கு கலந்து அதை அழுக்காக இருக்கும் உங்கள் வீட்டு குழாயில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பிறகு ஸ்க்ரப் கொண்டு தேய்க்கவும். இப்படி செய்தால் குழாய் பளபளக்கும். ஒருவேளை உங்களிடம் வெள்ளை வினிகர் இல்லையெனில், எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க:  டூத் பிரஷை எத்தனை நாட்களுக்குப் பிறகு மாற்ற வேண்டும் தெரியுமா..?

5. கண்ணாடியை பளபளப்பாக்கும் :

உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி அழுக்காகவும், மங்கலாகவும் இருந்தால், அதனை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு துணியில் டூத் பேஸ்ட் கொண்டு கண்ணாடியை தேய்க்கவும். பிறகு சுத்தமான துணியால் கண்ணாடியை துடைக்கவும். இப்படி செய்தால் உங்கள் வீட்டு கண்ணாடி பிரகாசிக்கும்.

6. பருக்கள் குணமாக :

முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பருக்கள். அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். எனவே, முகத்தில் இருக்கும் பருக்களை எளிதில் நீக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு பருக்கள் இருக்கும் இடத்தில் டூத் பேஸ்ட் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, பின் மறுநாள் காலை முகத்தை கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், மூன்று நாட்களில் முகத்தில் இருக்கும் பருக்கள் இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

7. கைகளில் துர்நாற்றம் நீங்க :

பொதுவாகவே, வாயில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க தான் டூத் பேஸ் கொண்டு பல் துலக்குகிறோம். அதுபோலவே, நாம் அசைவ உணவு ஏதாவது சாப்பிட்ட பிறகோ அல்லது வீடு மற்றும் வாகனங்களை சுத்தம் செய்த பிறகு கைகளில் அடிக்கும் நாற்றத்தை போக்கவும் டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை கைகளில் தடவி, பின் கழுவினால் துர்நாற்றம் அடிக்காது.

8. கார் ஹெட்லைட்கள் சுத்தம் செய்யலாம் : 

உங்கள் கார் ஹெட்லைட்கள் சுத்தம் செய்ய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு மென்மையான துணியில் டூத் பேஸ்ட் தடவி அவற்றை சுத்தம் செய்யுங்கள். பிறகு ஈரமான துணியைக் கொண்டு மீண்டும் சுத்தம் செய்தால், அவை பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.

9. லிப்ஸ்டிக் கரையை போக்க :

இதற்கு ஜெல் அல்லாத டூத் பேஸ்ட்டை ஒரு துணியில் தடவி, பிறகு அவற்றைக் கொண்டு தேய்க்கவும். பின் ஈரமான துணியில் மீண்டும் கழுவினால் கறை விரைவில் நீங்கிவிடும். இது லிப்ஸ்டிக் மட்டுமல்லாமல் மை, காபி கறை போன்ற விடாப்பிடியான கறைகளையும் நீக்கும்.

10. தடிப்புகளை குணமாக்கும் :

இதற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் டூத் பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால், எரிச்சல் நீங்கும். தடிப்புகள் விரைவில் குணமாக இதை நீங்கள் தினமும் செய்ய வேண்டும்.

11. ஷூக்களை சுத்தம் செய்ய :

ஷூக்களில்  படிந்திருக்கும் விடப்படியான கறைகளை சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். இதற்கு டூத் பேஸ்ட்டை ஒரு துணியில் எடுத்து அதை கறை உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறை நீங்கி ஷூ பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!