டூத் பிரஷை எத்தனை நாட்களுக்குப் பிறகு மாற்ற வேண்டும் தெரியுமா..?
Toothbrush Facts : பற்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். அதுபோல, டூத் பிரஷையும் அவ்வப்போது மாற்ற வேண்டும்.

பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். இதுகுறித்து நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். நாம் தினமும் இரண்டு வேளை பிரஷ் பண்ணுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்குவது மட்டுமின்றி, பற்களும் வலுவடையும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொருவரும் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப டூத் பிர்ஷ் வாங்கி பயன்படுத்துகின்றன. ஆனால், சிலர் டூத் பிரஷின் நார் தேய்ந்து போன பிறகும் கூட அதை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். ஆனால், இப்படி பயன்படுத்து மிகவும் தவறு.
மேலும் எத்தனை நாட்களுக்குப் பிறகு டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. எனவே, இந்த கட்டுரையில் டூத் பிரஷை எப்போது மாற்ற வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளும் பார்க்கலாம்.
நிபுணர்கள் கூற்றுப்படி, நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் சரி அதை 3 (அ) 4 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக மாற்ற வேண்டும். காரணம், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதன் நார் கெட்டுப் போய் கடினமாகிவிடும் மற்றும் அதில் பல் துலக்கினால் பல் சேதமடையும்.
இதையும் படிங்க: டூத் பேஸ்ட் வாங்க போறீங்களா..? ப்ளீஸ்.. 'கலர் மார்க்' பாத்து வாங்குங்க ஏன் தெரியுமா..?
அதுபோல உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் அல்லது வாய் பூஞ்சை தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், உடனே டூத் பிரஷ்ஸை மாற்றி விடுங்கள். காரணம், பாக்டீரியாக்கள் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும். இல்லையெனில், நீங்கள் குணமடைவதற்கு பதிலாக தொடர்ந்து நோய்வாய்ப்படுவீர்கள்.
இதையும் படிங்க: பற்கள் பளபளக்க இந்த 3 இலைகளை மென்று சாப்பிடுங்க...அது என்ன தெரியுமா?
குடும்பத்தில் உள்ள அனைவரது டூத் பிரஷ்ஸை ஒரே இடத்தில் வைக்க கூடாது. இவ்வாறு செய்தால் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏதேனும் நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு அதிகம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D