பெற்றோர்களே உங்கள் குழந்தையின் கூச்சத்தைப் போக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!!

உங்கள் குழந்தையின் கூச்சத்தைப் போக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

Ways to Help Your Child Overcome Shyness in tamil mks

Ways to Help Your Child Overcome Shyness : குழந்தைகளிடம் கூச்சம் சுபாவம் இருப்பது பொதுவானது. ஆனால் குழந்தைகளிடம் இருக்கும் இந்த பழக்கம் அவர்களின் நம்பிக்கை மற்றும் சமூக தொடர்புகளை பாதிக்கும். குழந்தைகளிடம் இருக்கும் கூச்ச சுபாபத்தை போக்குவது அவர்களின் வளர்ச்சிக்கு ரொம்பவே முக்கியம். உங்கள் குழந்தையிடம் இருக்கும் கூச்ச சுபாபத்தை போக்கி சமூகத்துடன் பழகுவதற்கு உதவுவதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

குழந்தையின் கூச்சத்தைப் போக்க  சில பயனுள்ள குறிப்புகள்:

Latest Videos

1. காரணங்களை தெரிந்து கொள்:

உங்கள் குழந்தை ஏன் கூச்சப்படுகிறார்கள் என்பதற்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.. அதாவது இதற்கு மரபியல், கடந்த கால அனுபவங்கள் அல்லது ஆளுமை பண்புகள் கூட காரணமாக இருக்கலாம். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்களது நடத்தையை கவனித்து அதற்கான நுண்ணறிவுகளை வழங்க முடியும். இந்த புரிதல் உங்களிடம் இருந்தால் உங்கள் குழந்தையின் கூச்ச சுபாபாத்தை சுலபமாக கையாள முடியும்.

2. பிறரிடம் பேச ஊக்குவி

உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் பேச ஊக்குவிக்க வேண்டும்.. அவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம் குறைய ஆரம்பிக்கும். இது அவர்களின் சமூகத்திறன் மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவும்.

3. முன்மாதிரியாக இரு:

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள் எனவே நீங்கள் மற்றவர்களுடன் பேசு விதம் உங்கள் குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

இதையும் படிங்க:  குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்

4. பாதுகாப்பான சூழல்:

குழந்தை இருக்கும் இடம் எப்போதும் பாதுகாப்பாகவும், ஆதரவான சூழலாகவும் இருக்க வேண்டும். இது அவர்களது தகவல் தொடர்புகளை ஊக்குவிக்கவும், கவலைகளை போக்கவும் உதவும்.  முக்கியமாக அவர்களின் நம்பிக்கையை உருவாக்கும் மற்றும் அவர்கள் பாதுகாப்பாக உணர்வைக்கும். இதனால் அவர்களிடம் இருக்கும் கூச்சமும் குறையும்.

5. முயற்சியை பாராட்டு:

குழந்தை செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன முயற்சிகளையும் பாராட்ட மாறாதீர்கள். நேர்மையான முறையில் தொடர்ந்து முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கவும். குழந்தையின் வெற்றிக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்கள் செய்யும் முயற்சிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

இதையும் படிங்க:  பச்சிளம் குழந்தைக்கு 6 மாசத்துக்கு முன் தண்ணீர் கொடுக்கக் கூடாதுனு சொல்றது ஏன் தெரியுமா?

6. சமூகத் திறன்களை கற்றுக் கொடு:

பிறரை வாழ்த்துதல் போன்ற அடிப்படை சமூக திறன்களை உங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். இது அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக அவர்களின் நம்பிக்கையே வளர்க்க இந்த திறன் பெரிதும் உதவும். 

7. இதை செய்யாதே:

என் குழந்தை கூச்ச சுலபம் என்ற முத்திரையை குழந்தை மீது பதிக்காதே. இது அவர்களது முன்னேற்றத்தை தடுக்கும். நம்பிக்கையே குறைக்கும். மாறாக குழந்தையிடம் இருக்கும் இரக்கம், ஆர்வம் போன்ற நேர்மறையான பண்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

8. வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்குங்கள்:

உங்கள் குழந்தை சமூக அமைப்பில் வெற்றி பெற அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். அதாவது அவர்கள் விரும்பும் செயல்களே செய்ய அவர்களை ஊக்குவிக்கவும். இதனால் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும்.

9. பொறுமை அவசியம்

உங்கள் குழந்தையிடம் இருக்கும் கூச்சத்தை போக்க பொறுமை ரொம்பவே அவசியம். எனவே அவர்களிடம் கடினமாக நடந்து கொள்வதை தவிர்க்கவும். அவர்கள் தாங்களாகவே மாறும் வரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, நல்வழி காட்டுங்கள்.

vuukle one pixel image
click me!