நடைப்பயிற்சி இதயத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்தை மேம்படுத்தி, மூட்டு வலியைக் குறைத்து, தசை மற்றும் எலும்பு வலிமையை அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்வதை விட குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது மூளை தசைகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்வதை உறுதிபடுத்துகிறது. மேலும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் சோர்வை போக்கி, முழுகவனத்துடன் ஈடுபட வைப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது. இது மூட்டுக்களுக்கு அழுத்தம் தராமல், அதே சமயம் சுறுசுறுப்பாக செய்யக்கூடிய பயிற்சி என்பது கூடுதல் சிறப்பு.
தினமும் நடைபயிற்சி செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நடைபயிற்சி இதயத்திற்கு இவ்வளவு நன்மைகளா?
தினமும் தொடர்ந்து நடை பயிற்சி மேற்கொள்வதால் இதயத்தை வலுப்படுத்தவும், இதயத் துடிப்பை சீராகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி
மிதமான மற்றும் தீவிர நடைப்பயிற்சியானது நோய் எதிர்ப்புச் செல்களின் சுழற்சியை ஊக்குவிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
உணவுக்குப் பிறகு நடப்பது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளைத் தூண்டி, செரிமானப் பாதை வழியாக உணவைச் சிறப்பாகச் செல்வதை ஊக்குவித்து, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது.
ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் இவ்வளவு நல்லதா?
நடைப்பயிற்சி மூட்டுகளை நெகிழ்வாகவும், லூப்ரிகேட்டாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது விறைப்பு மற்றும் வலியைக் குறைக்கும். குறிப்பாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு. இது மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
தசை, எலும்புகள் வலுவடையும்:
தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வது கால்கள் மற்றும் மையப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. அதே சமயம் நடைபயிற்சியின் போது கால்கள் எடையை தாக்குவதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் குறைகிறது.