Vitamin C Fruit Benefits in Tamil: வைட்டமின் சி சத்து கிடைக்க உண்ண வேண்டிய உணவுகள் முழுவிவரம்..
Vitamin C Fruit Benefits in Tamil: கோடைகாலத்தில் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த பருவத்தில் உடல் சூடு காரணமாக பல்வேறு நோய்கள் நம்மை தாக்கலாம். வெயிலின் தாக்கம் நம் உடலை விரைவில் சோர்வடைய செய்யும். சரும நோய்கள் வரும். இதனால் எப்போதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பலர் கோடை காலத்தில் எலுமிச்சை சாறு அதிகமாக அருந்துவார்கள் இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். வைட்டமின் சி சத்தும் அவர்களுக்கு கிடைக்கும். இதை போலவே வைட்டமின் சி சத்தையும் கொடுத்து, உடல் சூட்டையும் போக்கும் 3 பழங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் சி நன்மைகள்
வைட்டமின் சி-யை அஸ்கார்பிக் அமிலம் என்றும் சொல்வார்கள். இது பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. குறிப்பாக நம் செல்களைப் பாதுகாக்கவும் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தோல், இரத்த நாளங்கள், எலும்புகள்,குருத்தெலும்புகளை பராமரிப்பதில் வைட்டமின் சி சத்து தான் பெரும்பாங்காற்றுகிறது. வைட்டமின் சி- நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
கொய்யா
கோடைகாலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய பழம் கொய்யா. இதில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மலச்சிக்கலை போக்கிவிடும். கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வைட்டமின் சி குறைபாட்டையும் நீக்கலாம். வெயில் நேரத்தில் கொய்யா சாப்பிடுதவால் உடல் வெப்பமும் சீராக இருக்கும்.
முலாம்பழம்
கோடைகாலம் வந்தாலே முலாம்பழம் சந்தையில் அதிக அளவில் கிடைக்கத் தொடங்கிவிடும். தர்பூசணியை போலவே முலாம் பழமும் உடல் ஆரோக்கியத்தை பேணும். வெயிலில் நீரிழப்பை போக்க முலாம்பழம் சாப்பிடுவது நல்லது. முலாம்பழத்தில் வைட்டமின் சி கூட அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி பலன்கள்.. இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியும்! இப்ப தொடங்கி 2025 வரை பொற்காலம் தான்!
பாகற்காய்
பாகற்காயில் நார்ச்சத்து உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்ல பலன்களை தரும் அற்புத காய். கோடைகாலத்தில் பாகற்காய் சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் சி குறைபாட்டைப் போக்கலாம்.
மிளகாய்
பச்சை மற்றும் சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு ஆகியவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன. ஆனால் பச்சை மிளகாயில் கணிசமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. உங்கள் உடலில் வைட்டமின் சி குறைபாடு வராமல் இருக்க பச்சை மிளகாயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலே சொன்ன உணவுகள் உங்களுடைய உணவில் வைட்டமின் சி குறைபாட்டை எளிதில் சமாளிக்க உதவும்.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை கலந்து, தினமும் தலையில் தடவினால்.. முடி அடர்த்தியா காடு மாதிரி வளரும்!!