Corona: கொரோனா ஊசி தெரியும்....? இது என்னடா..கொரோனா வடை! இணையத்தை கலக்கும் கொரோனா வடை ரெசிபி..!

By manimegalai aFirst Published Jan 24, 2022, 12:02 PM IST
Highlights

கொரோனா வைரஸ் வடிவத்தில், பெண் ஒருவர் வடை செய்து அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் அதி வேகமாக பரவி வருகிறது.

ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஒமைகிறான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.

இந்த சூழ்நிலைகளிலிருந்து வெளிவர தங்கள் மன அழுத்தத்தை போக்க, மக்கள் தங்கள் நேரத்தை அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். அதில், சில வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது உலா வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் புதிது புதிதாக சில வித்தியாசமான உணவு பொருட்களை சமைத்து  இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது, பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வடிவில் வடையின் ரெசிபி செய்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது, அந்த ரெசிபி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

அவர் அதற்கூறிய செய்முறை விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளார்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப் 

சீரகம் - 1 டீஸ்புன் 

 உப்பு _ தேவையான அளவு 

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் -2

 துருவிய கேரட் - 1 கப் 

கேப்சிகம் -1

கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை:

முதலில் அரிசி மாவு, சீரகம் , உப்பை சேர்த்து சிறிது ஹாட் வாட்டரை சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும்.

பின்னர், கடாயினை சூடாக்கி உருளைக்கிழங்கு, வெங்காயம், துருவிய கேரட், கேப்சிகம், கறிவேப்பிலை மற்றும் மசாலாக்களை சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். 

பின்னர், அந்த மசாலாவை உருண்டையாக உருட்ட வேண்டும். தொடர்ந்து, மாவை தட்டையாக்கி, அதன் மீது மசாலா உருண்டையை நடுவில் வைத்து, மொத்தமாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு, கொரோனா வைரஸ் வடிவத்தை அதற்கு தர வேக வைத்த சோற்றை பயன்படுத்த வேண்டும். இறுதியாக அந்த வடையை அதற்குள் வைத்து ஸ்டஃபிங் செய்ய வேண்டும். உடனே கொரோனா வடை ரெசிபி  தயார், இது போன்ற செய்முறை விளக்கம் கொண்ட வீடியோவை அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

//

Corona vada! Bharat ki naari sab par bhaari! . pic.twitter.com/sf1zoLPih2

— Mimpi(@mimpful)

 
 

click me!