Naked sleeping: ட்ரெஸ் இல்லாம தூங்கினா மன அழுத்தம் குறையுமாம்...? ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை..!!

By manimegalai aFirst Published Jan 24, 2022, 10:07 AM IST
Highlights

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், பிறந்த மேனியாக தூங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

நவீன கால மாற்றத்தால், உறக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம் கூடப் போதுமானது தான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவை விட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இளம் வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள். இந்தியர்களில் 64%  பேர் போதுமான அளவு தூங்கவில்லை என்றும், 51% பேர் வரை தாங்கள் 4-6 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், 10% பேர் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மையின் நீண்டகால விளைவுகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். 

மேலும் இது நினைவாற்றல் குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய்க்கான ஆபத்து, இதய நோய் ஆபத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் குறைந்த செக்ஸ் டிரைவ் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் மேலும் கூறினார்கள்.
 
இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், பிறந்த மேனியாக தூங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை வெறும் 2 சதவீதத்தினர் மட்டும்தான் பிறந்த மேனியாக தூங்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் 100 -இல் 40 சதவீத மக்கள் பிறந்த மேனியாக தூங்குகிறார்களாம். அதுதான் அவர்களுக்கு பிடிக்கவும் செய்கிறதாம். இது பலவித நன்மைகளை தருவதாகவும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இப்படி பிறந்த மேனியா தூங்குவதனால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும்:

1. இப்படி ஆடை இல்லாமல் தூங்குவதினால், நமது இரத்தம் சீக்கிரம் குளிர்ச்சியடைந்து விடும். இதனால் சீக்கிரமாக தூக்கத்திற்கு சென்றுவிட முடியும். 

2. ஆழ்ந்த தூக்கம் சொந்தமாகும். 

3. நாள் முழுவதும் ஆடை அணிந்திருப்பதால், தோலில் உள்ள செல்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். ஆனால் பிறந்த மேனியாக தூங்கும் போது அது மிக சீராக நடைபெறும். இதனால் தோல் பளபளப்பாக இருக்கும். 

4. இறுக்கமான ஆடைகள் மன அழுத்தத்தை அதிகமாக கொடுக்கும். ஆனால் இப்படி தூங்குவதால் அதிகப்படியான மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

5. அதிக எடை கூடுவதும், இதனால் தடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

click me!