அடுப்பில் பால் பொங்கி ஊற்றாமல் தவிர்க்க...இந்த 5 டிப்ஸுகளை பின்பற்றுங்கள்...!!

By manimegalai a  |  First Published Jan 24, 2022, 10:49 AM IST

அடுப்பில் பால் பொங்கி ஊற்றாமல் தவிர்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


பால் பயன்படுத்தாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் பால் காய்ச்சுவது தான் இந்தக் காலத்து பரபரப்பு பெண்களுக்கு சவாலாகிவிட்டது. காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள் பால் காய்ச்சுவதில் கோட்டைவிட்டு விடுவது அவ்வப்போது நடக்கும். பாலை வைத்துவிட்டு என்னதான் கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமல் ஒரு கணம் திரும்பிவிட்டால் போதும் பொங்கி வழிந்து அடுப்பெல்லாம் பாழாகிவிடும். காலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தால் நம்முடைய மனநிலையும் அன்றைய நாள் முழுவதும் நிதானமாக இருக்காது. அந்த டே முழுக்க ஸ்பாயில் ஆகிவிடும்.  சரியென்று மில்க் குக்கர் வாங்கினால், அது ஊரையே சத்தம் போட்டு கூப்பிடுகிறது. தூங்க வைத்த குழந்தை வீல் என்று கத்திக் கொண்டு எழுந்துவிடுகிறது. 

Tap to resize

Latest Videos

எனவே இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் வைத்துள்ளோம். அது என்னவென்று பார்க்கலாம்.

 பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றும் முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அந்தப் பாத்திரத்திற்குள் பால் பாத்திரத்தை வைக்கவும். இவ்வாறு செய்வதால் பால் பொங்கி வெளியே ஊற்றாது.
 
சிறு தீயில் வைப்பது:
 
பால் பொங்கி வரும் வேலையில் அடுப்பை சிறு தீயில் வைத்துவிட்டு அதன் மேல் இரண்டு சொட்டு தண்ணீர் விட்டுப் பாருங்கள். பொங்கிய பால் மீண்டும் கீழ் மட்டத்திற்கு சென்றுவிடும். இதனால் பால் பொங்கி வழிவதை தவிர்த்துவிடலாம்.

பாத்திரத்தின் விளிம்பில் வெண்ணெய் தடவுவது:

பால் பாத்திரத்தின் விளிம்பில் வெண்ணெய்யைச் சுற்றி தடவி விடவும். பின்னர் பால் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதனால் பால் கொதிநிலையை அடைந்துவிட்டாலும் கூட அது வெளியே பொங்கி ஊற்றாமல் தடுக்கப்படும்.

மர ஸ்பூன் போடலாம்:

பால் காய்ச்சும் போது பாத்திரத்தின் நடுவே ஒரு பிடி நீளமான மர ஸ்பூனை உள்ளே போட்டு வைக்கலாம். ஆனால் அந்த மர ஸ்பூன் குழம்பு, ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்தும் ஸ்பூனாக இல்லாமல் இதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் ஸ்பூனாக இருக்க வேண்டும்.

தூக்கி குலுக்கலாம்:

நம் அம்மா, பாட்டி எல்லோரும் பாலை பொறுமையாகக் காய்ச்சுவதைக் கவனித்திருப்போம். 2 நிமிடங்கள் பால் காய்ச்சும் போது ஸ்டவ் அருகே நின்றால் போதும் பொங்காமல் காய்ச்சி எடுத்துவிடலாம். பால் பொங்கி வரும் போது பாத்திரத்தை கவனமாக தூக்கி அப்படியே ஆப்பச் சட்டியை சுத்துவது போல் பாத்திரத்தை லேசாக சுற்றினால் போதும். பால் பொங்காது.

ஆனால் இதைச் செய்யும் போது கடுகளவேனும் கவனம் சிதறினால் சுடு பால் கையில் சிந்தி கொப்புளம் ஏற்பட்டுவிடும். எனக்கு பொறுமை கம்மி என்பவர்கள் இந்த முறையை கைவிட்டுவிடலாம்.

நுரை மீது தண்ணீர் தெளிக்கலாம்:

பால் பொங்கி வரும் போது நுரை மீது லேசாக சுத்தமான தண்ணீரை தெளித்துவிடலாம். மூன்று முறை பாலை பொங்கவிட்டு இதுபோல் தண்ணீர் தெளித்து தெளித்து இறக்கிவிடலாம்.

அடுத்தமுறை பாலை அடுப்பில் வைக்கும்போது மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் உங்கள் காலை நேர பிரச்சனையில் முதல் பிரச்சனையே சரியாகிவிடும்.

click me!