மக்களே இன்று வெளியில் செல்லாதீர்கள்..! ரொம்ப கஷ்டமா இருக்கும்...!

By Arun VJFirst Published Jun 15, 2019, 12:58 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 நகரங்களில் 100 டிகிரி வெப்ப நிலையை விட தாண்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் வழக்கத்தை விட 7 டிகிரி அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

மக்களே இன்று வெளியில் செல்லாதீர்கள்..!  ரொம்ப கஷ்டமா இருக்கும்...! 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 நகரங்களில் 100 டிகிரி வெப்ப நிலையை விட தாண்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் வழக்கத்தை விட 7 டிகிரி அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம், திருத்தணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வேலூரில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நாகப்பட்டினம் திருச்சி உள்ளிட்ட இடங்களில் 102 டிகிரி வெப்ப நிலையும், கடலூரில் 101 டிகிரியும், புதுச்சேரி தூத்துக்குடி காரைக்கால் உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி வெப்ப நிலையும் பதிவ பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, அரியலூர், நீலகிரி, கோவை திண்டுக்கல் திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இன்றளவும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாதது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 சென்டி  மீட்டர் மழையும்  பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்

click me!