கொரோனா தொடர்பான மிக முக்கிய "அதிரடி அறிவிப்புகள்"..!

By ezhil mozhiFirst Published Apr 13, 2020, 7:39 PM IST
Highlights
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய 25 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது 
கொரோனா தொடர்பான மிக முக்கிய "அதிரடி அறிவிப்புகள்"..! 

நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
இந்த ஒரு நிலையில், ஊரடங்கு உத்தரவை இம்மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  உள்ளது.இதனை தொடர்ந்து, மேலும் பல அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதில் சில முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம் 

நேற்றுவரை 2.06 லட்சம் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அடுத்த 6 வாரங்களுக்கு பரிசோதனை நடத்த தேவையான கிட்கள் கைவசம் உள்ளன.சீனாவிலிருந்து முதற்கட்டமாக கொரோனா சோதனை கிட்கள், ஏப்ரல் 15ம் தேதி இந்தியா வந்தடைய உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தெரிவித்து உள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய 25 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு  உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது 

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளது

இந்தியாவில் 9352 பேர் பாதிப்பு

நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 324 ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,352ஆகவும் உயர்ந்து உள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 980ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து  உள்ளது 


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார் 

புதுவையிலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என புதுவை முதல்வர்  நாராயணசாமி தெரிவித்து உள்ளார் 
click me!