ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லட்சுமி நாரயணன் ரெட்டி.இவர் காய்ச்சல் காரணமாக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அம்பத்தூர் மின்மயானத்தில் நடந்த அதிர்ச்சி..! உயிரிழந்த ஒரு மருத்துவரின் சடலத்துக்கே இப்படியா ?
சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்ததால் அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள் அம்பத்தூர் மின்மயானத்தில் வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த அங்கிருந்த மின்மயான ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளனர்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லட்சுமி நாரயணன் ரெட்டி.இவர் காய்ச்சல் காரணமாக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்ததை அடுத்து,அவரது உடல் அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் உள்ள மின் மயானத்தில் மருத்துவமனை ஊழியர்கள் கொண்டுவந்து உள்ளே வைத்து விட்டு சென்று உள்ளனர்.
இதனை கண்ட மின்மயானத்தில் உள்ள ஊழியர்கள் இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த ஊழியர்களிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
காய்ச்சல் வந்தாலும், பெரும் நோய் வந்தாலும் தன்னலமற்று வேலை செய்யும் மருத்துவர்களுக்கு கொரோனா வந்தாலும் இதுதான் நிலைமை என உணர வைத்துள்ளது இந்த கொடூர வைரஸ். இந்த ஒரு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.