ஊரடங்கு உத்தரவில் கிடைத்த அடுத்த "ஜாக்பாட்"..! முதல்வர் எடப்பாடி அதிரடி..!

By ezhil mozhiFirst Published Apr 13, 2020, 4:58 PM IST
Highlights
பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கையை பரிசீலனை செய்து காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணி வரையிலான காலத்தில் பேக்கரிகள் இயங்க தடை இல்லை என்றும், ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் படி, பார்சல் மட்டுமே செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார் 
ஊரடங்கு உத்தரவில் கிடைத்த அடுத்த "ஜாக்பாட்"..!   முதல்வர் எடப்பாடி அதிரடி..! 

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பாஜக ஆளாத மாநிலங்களான மகாராஷ்டிரா ஒடிசா மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த ஒரு நிலையில் தமிழகத்தில் ஏன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின்.

இந்த ஒரு நிலையில் பதினான்காம் தேதியான நாளையோடு நாடு முழுக்க ஊரடங்கு முடிவடையும் நிலையில் காலை 10 மணியளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். இந்த ஒரு நிலையில் இதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் மிக முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்... அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போது வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். 

இதற்கிடையில் பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கையை பரிசீலனை செய்து காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணி வரையிலான காலத்தில் பேக்கரிகள் இயங்க தடை இல்லை என்றும், ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் படி, பார்சல் மட்டுமே செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார் 


கொரோனா  தாக்கம் அதிகரித்துள்ள இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் யாரும் பசியில் வாடி விடக் கூடாது என்பதற்காக அத்தியாவசிய தேவைகளான உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதில் தமிழக அரசு சலுகை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது.
click me!