அசதியில் ஸ்ட்ரெட்சரில் அசந்து தூங்கிய ஊழியர்..! சடலம் என நினைத்து எரியூட்டியதில் துடிதுடித்து இறந்த கொடூரம்!

By ezhil mozhiFirst Published Apr 13, 2020, 2:38 PM IST
Highlights
அமெரிக்காவிலுள்ள இறுதி சடங்கு செய்யும் கிடங்கில் தொடர்ந்து வேலை செய்த காரணமாக ஒரு ஊழியர் அசந்து உறங்கி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பெரும் பாதிப்புக்குள்ளாகி தினந்தோறும் 1000 முதல் 2000 நபர்கள் வரை கொத்துக்கொத்தாக மடிகின்ற அவலநிலை ஏற்பட்டு உள்ளது 
அசதியில் ஸ்ட்ரெட்சரில் அசந்து  தூங்கிய ஊழியர்..! சடலம் என நினைத்து எரியூட்டியதில் துடிதுடித்து இறந்த கொடூரம்..! 

தொடர்ந்து வேலை செய்து அசதியால் ஸ்ட்ரெச்சரில் உறங்கியவரை இறந்தவராக கருதி மற்ற சடலங்களுடன் சேர்த்து எரித்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிலுள்ள இறுதி சடங்கு செய்யும் கிடங்கில் தொடர்ந்து வேலை செய்த காரணமாக ஒரு ஊழியர் அசந்து உறங்கி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பெரும் பாதிப்புக்குள்ளாகி தினந்தோறும் 1000 முதல் 2000 நபர்கள் வரை கொத்துக்கொத்தாக மடிகின்ற அவலநிலை ஏற்பட்டு உள்ளது அந்த வகையில் தற்போது வரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இதுவரை நியூயார்க்கில் மட்டும் தான் மிக அதிகமாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகரிலுள்ள இறுதிச் சடங்கு செய்யும் கிடங்கில் வேலை செய்யும் 58 வயதான மைக்கேல் ஜோன்ஸ்என்பவர் தொடர்ச்சியாக வேலை செய்து வந்துள்ளதால் சற்று அசந்து அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் 10 நிமிடம் அசந்து உறங்கி உள்ளார்.
 

அப்போது அந்த அறை முழுவதும் இறந்த உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் உள்ள நுழைந்த சக ஊழியர் ஒருவர் அனைத்தும் இறந்த உடல் தான் என நினைத்து தகவல் செய்யும் வேலையை தொடங்கினார். அப்போது உயிருடன் இருந்த மைக்கேல் ஜான்சனையும் தகனம் செய்யும் கிடங்கில் போட்டு உள்ளார். 


இதுகுறித்து மற்றவர்கள் தெரிவிக்கும்போது, மைக்கேல் உயிருடன் எரியூட்டப்பட்ட போது வெப்பம் காரணமாக அலறி உள்ளார். எங்கிருந்து அலறல் சத்தம் வருகிறது என அங்குமிங்கும் தேடி அவரை கண்டு பிடிப்பதற்குள் சாம்பலாகி விட்டார். 1400 முதல் 1800 பாரேநெட் வெப்பத்தின் காரணமாக வெறும் 15 நிமிடத்தில் உயிர் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனா பாதித்து தான் கொத்து கொத்தாக மடிகிறார்கள் என்றால், இப்படி இரவு பக்கம் பார்க்காமல் உடலை தகனம் செய்யும் வேளையில் இருந்தவரும் துடி துடித்து இறக்க நேரிட்டதை நினைத்தால் கேட்போர் மனதை பதற செய்கிறது அல்லவா..? இந்த செய்தி உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
click me!