மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கடை எப்ப திறப்பாங்களோ என காத்திருப்பவர்களுக்கு செம்ம ஜாலி..!

By ezhil mozhiFirst Published Apr 13, 2020, 1:30 PM IST
Highlights
திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி இந்த வார இறுதி நாள் வெள்ளிக்கிழமை வரை மாநிலத்தில் மது கடைகள் திறந்து வைக்க போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கடை எப்ப திறப்பாங்களோ என காத்திருப்பவர்களுக்கு செம்ம ஜாலி..! 

கொரோனா பரவல் நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில், மீண்டும் இரண்டு வாரங்களுக்கு அல்லது மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் அனைத்து மாநில அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆலோசனையில் அனைத்து மாநில முதல்வர்களும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த ஒரு நிலையில் மற்றொரு விஷயத்தை கவனித்து பார்த்தால் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் கிருமிநாசினி, சானிடைசர், ஷேவிங் ஜெல் குடித்து இறந்துபோன செய்தியையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில்10 கும் மேற்பட்டோர் இவ்வாறு இறந்துள்ளனர்.


இந்த ஒரு நிலையில் மது பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக மேகாலயா அரசாங்கம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி இந்த வார இறுதி நாள் வெள்ளிக்கிழமை வரை மாநிலத்தில் மது கடைகள் திறந்து வைக்க போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த 5 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அரசாங்கம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஒரு செய்து மதுபிரியர்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் மேகாலயாவில் மட்டுமே சாத்தியம் என்பதில் மற்ற இந்திய குடிமகன்களுக்கு சற்று ஏமாற்றம் தரும் செய்தியாக அமைந்துள்ளது .
click me!