Money Tips: பர்ஸில் பணம் எப்போதும் தங்க வேண்டுமா.....? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

manimegalai a   | Asianet News
Published : Jan 23, 2022, 07:26 AM IST
Money Tips: பர்ஸில் பணம் எப்போதும் தங்க வேண்டுமா.....? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

சுருக்கம்

வாஸ்து சாஸ்திரத்தில், பர்ஸில் பணம் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.

இன்றைய நவீன உலகில் பர்ஸில் பணம் வைத்திருப்பவர்கள் குறைவு தான். ஆனால், அப்படி வைத்திருப்பவர்களில், தங்கள் பர்ஸ் அல்லது வீட்டில் வைத்திருக்கும் பணப் பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால், சிலரது வீட்டில், பணம் வந்ததுதும் தெரியாமல் போனதும் தெரியாமால் இருக்கும். இன்னும் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன, இதை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாது. சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றை பர்ஸ் அல்லது பணப்பையில் வைத்திருப்பதால் பணம் தங்கும் என நம்பப்படுகிறது. ​​​​

டிப்ஸ்1

பர்ஸ் தோலினால் ஆன பர்ஸாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். லெதர் பர்ஸில் சில பொருட்களை  வைத்தால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும் என சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், பச்சை நிற பர்ஸ் வைத்திருப்பது மிகவும் நல்லது.

டிப்ஸ் 2

தாமரையின் விதையை பர்ஸில் வைத்துக்கொண்டால் பணம் தனங்கும். அன்னை லக்ஷ்மி தேவிக்கு தாமரை மிகவும் பிரியமானதாக இருப்பதால், லட்சுமி தேவியின் அருள் பொழியும் என நம்பப்படுகிறது. இது உங்களுக்கு நிதி வரவையும், மன அமைதியையும் தரும்.

டிப்ஸ் 3:

 உங்கள் பர்ஸில் ஒரு சிறிய ஸ்ரீ யந்திரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.

டிப்ஸ் 4:

பணம் என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இருப்பிடமாகும். நம் வீட்டில் பூஜை அறையை எப்படி சுத்தமாக வைத்திருப்போமோ, அதே போல் தான் நாம் வைத்திருக்கும் பர்ஸையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லாமல் ரூபாய் நோட்டுக்களை சுருட்டியோ அல்லது இஷ்டத்திற்கு மடித்தோ வைத்தால், மஹாலட்சுமி எப்படி வருவாள். அந்த பர்ஸை பார்த்தாலே காத தூரத்திற்கு ஓட்டம் எடுப்பாள். அதற்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தால் தான் மஹாலட்சுமியும் நம்முடைய பர்ஸில் நிரந்தரமாக குடியேறுவாள்.

டிப்ஸ் 5:

பர்ஸில் 7 கோமதி சக்கரங்களை வைத்திருப்பது செல்வம் தரும். இதனால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை  ஒருபோதும் ஏற்படாது.

டிப்ஸ் 6:

ஒரு ரூபாய் நாணயம் நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது. கூடவே, பர்ஸில் வைக்கக்கூடிய வகையில் ஒரு சிறிய அளவில் பச்சை பட்டுத் துணி அல்லது ஒரு பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு பர்ஸில் வைத்துக்கொள்வது அவசியம்.

டிப்ஸ் 7:

விஷ்ணு அரச இலைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானின் அருள் இருந்தால், அன்னை லக்ஷ்மியின் அருள் கிடைக்க தாமதம் ஆகாது. எனவே, ஒரு அரச இலையை கங்கா நீரில் சுத்தம் செய்து, அதை உங்கள் பர்ஸில் சுத்தமாக வைத்திருங்கள்.  எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் பர்ஸில் பணம் என்றென்றும், நிறைந்திருக்கு வாழ்த்துக்கள்!
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆபிஸில் ஸ்டைலா லுக்கா இருக்கணுமா? இந்த 6 ஸ்லீவ்லெஸ் ஷர்ட்ஸ் ட்ரை பண்ணுங்க
Pressure Cooker: தப்பி தவறி கூட இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க! குக்கர் வெடிக்க இதுதான் காரணம்!