தை மாத பலன்கள்: துரதிர்ஷ்டங்கள் நீங்கி..? வீட்டில் செல்வம் என்றென்றும் நிறைந்திருக்க லட்சுமி குபேர பூஜை..!

By manimegalai a  |  First Published Jan 23, 2022, 6:37 AM IST

இந்த தை மாதத்தில், செல்வத்தின் கடவுளான குபேரை எப்படி மகிழ்விப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.


தை மாத குபேர பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால், கடன் தொல்லை நீங்கும். வீட்டில், என்றென்றும் செல்வம் பெருகும்.  வருடம் இரண்டு முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த  செல்வம் மிகவும் அவசியம். 

செல்வத்தின் கடவுள் குபேரன்:

Tap to resize

Latest Videos

செல்வம் செழிப்புடன் இருக்க பொதுவாக மக்கள் அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால், தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும். மகாலக்ஷ்மி வணங்கினால் மட்டும் போதாது, செல்வத்தின் கடவுளான குபேரரையும் மகிழ்விக்க வேண்டும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. செல்வத்தின் கடவுளான குபேரை எப்படி மகிழ்விப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த தை மாதத்தில், வடகிழக்கு திசையில் குபேர ஸ்தாபனம் செய்து அவரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். . அதாவது,  வீட்டின் வடகிழக்கு திசையை சுத்தம் செய்து கங்காஜலத்தால் சுத்திகரிக்கவும்.  லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு  முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு, தீபம், ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். நடுவில் சுத்தமான தண்ணீர்  நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு  மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும். இதற்குப் பிறகு, குபேர் பகவானை நினைத்து, பூஜை செய்தால், உங்கள் மன ஆசைகள் நிறைவேறும்.

 குபேர மந்திரம் ஜபித்தல்

இந்த தை மாதத்தில் தினமும் காலையில், குளித்த பின், 'ஓம் ஸ்ரீம், ஓம் ஹ்ரீம் ஶ்ரீம், ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வித்தேஎஷ்வராய: நமஹ' என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை காலை மற்றும் மாலை இரு வேளையும் உச்சரிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

குபேர் யந்திரத்தை வழிபடுவதும் குபேர பகவானை மகிழ்விக்கும். குபேர் யந்திரத்தை தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோகம் ஆகிய மூன்று உலோகங்களில் ஏதேனும் ஒன்றில் வாங்கி வரவும். அதன் பிறகு தினமும் இந்த யந்திரத்தை வழிபடவும். இப்படி செய்வதால் வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில், துரதிர்ஷ்டங்களும் நீங்கும்.

திரயோதசி அன்று குபேர வழிபாடு

செல்வத்தின் கடவுளான குபேர் பூஜையை இந்த தை மாதத்தில் செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.  அப்படி முடியவில்லை என்றால், சில குறிப்பிட்ட தேதியிலும் வழிபாடு செய்வதும் பலனைத் தரும். அமாவாசையின் 13வது நாளான திரயோதசி நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையாக பூஜை செய்ய வேண்டும். வழிபடும் இடத்தை சுத்தம் செய்து, குபேர் யந்திரத்தை வைக்கவும். பின்னர் இந்த யந்திரத்தில் அட்சதையால் அர்ச்சனை செய்யவும். இதற்குப் பிறகு சங்கல்பம் செய்து கொண்டு குபேரனை வணங்கி, குபேர மந்திரத்தை உச்சரிக்கவும். குபேர மந்திரத்தை ஜெபமாலையை கையில் வைத்துக் கொண்டு உச்சரிக்கவும். இதைச் செய்வதன் மூலம், செல்வத்தின் கடவுளான குபேர் மகிழ்ச்சி அடைகிறார் உங்களது பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்றன.
 

click me!