ஓட்டும் போதே தீப்பிடித்த இருசக்கர வாகனம்..! கருகி உயிரிழந்த இளைஞர்..! அதிர்ச்சி காட்சி..!

Published : Mar 09, 2019, 06:50 PM IST
ஓட்டும் போதே தீப்பிடித்த இருசக்கர வாகனம்..! கருகி உயிரிழந்த இளைஞர்..! அதிர்ச்சி  காட்சி..!

சுருக்கம்

தாம்பரம் மதுரவாயல் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த ஒருவர் தீயில் கருகி இறந்துள்ளார்.

தாம்பரம் மதுரவாயல் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த ஒருவர் தீயில் கருகி இறந்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில், இரண்டு பேர் பயணம் செய்து உள்ளனர். அப்போது வாகனத்தில் தீப்பிடித்து உள்ளது. இதனை கண்ட பின்னால் அமர்ந்து இருந்த நபர் எகிறி கீழே குதிக்க, வாகனத்தை ஓட்டி சென்ற நபர் மட்டும் தீயில் கருகி உயிர் இழந்தார். வாகனமும் கருகியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்னால் அமர்ந்து இருந்த நபர் அதிர்ச்சியில் அங்கேயே மயக்கம் அடைந்துள்ளார். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

ஆனால், தீயில் கருகி இறந்துபோன நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு