கிளிகளுக்கு திருமணம்! பாரம்பரிய முறையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்!

By SG BalanFirst Published Feb 9, 2023, 10:57 AM IST
Highlights

கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த கிளிக்கு கல்யாணம் செய்துவைத்து அழகு பார்த்திருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் பரிகார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிளிகளை வளர்த்த இரண்டு பேர் தங்கள் கிளிகளுக்கு திருமணம் செய்துவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் கரேலி மாவட்டத்தில்தான் கிளிகளுக்கு கல்யாணம் செய்துவைக்கப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆடல் பாடல் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ராம்ஸ்வரூப் பரிகார் என்பவர் மைனா என்ற பெண் கிளியை பாசத்துடன் வளர்ந்துவந்தார். மகள் போல் வளர்த்த கிளிக்கு ஒரு திருமணம் செய்துவைத்து மணவாழ்க்கை வாழ்வதைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பரிகார். ஆனால் மைனாவுக்கு பொருத்தமான ஜோடியைத் தேடிப்பிடிக்க வேண்டியது இருந்தது.

இதை எல்லாம் கூடவா திருடுவாங்க! டவர் முதல் தண்டவாளம் வரை... வியக்க வைத்த நூதனத் திருட்டுகள்!

இந்நிலையில் பண்டல் லால் விஸ்வகர்மா என்பவரைச் சந்தித்துள்ளார். அவரும் ராம்ஸ்வரூப்பைப் போல கிளிகள் மீது பாசத்தை பொழிபவராக இருந்தார். அவர் வளர்த்த ஆண் கிளிக்கு தன் மைனாவை கல்யாணம் செய்துவைக்க விரும்பினார் ராம்ஸ்வரூப். உடனே பண்டல் லாலும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

கிளிகளுக்கு ஜாதகம்கூட பார்த்து பொருத்தம் கச்சிதமாக இருப்பதையும் உறுதி செய்துகொண்டனர். இதனையடுத்து இரண்டு கிளிகளுக்கும் ஜாம் ஜாம் என்று கல்யாணம் செய்துவைக்கப்பபட்டது. பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு இரண்டு ஊர் மக்களும் வந்து கிளிகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

ராஜஸ்தானில் ஒட்டகத்தை பாசத்தோடு வளர்த்துவந்த ஒருவர் அதனை ஜோடி சேர விடாமல் வைத்திருக்கிறார். ஒருநாள் சாலையில் சென்ற தன் ஜோடியைப் பார்த்த ஒட்டகம் கட்டி வைத்த கயிற்றைப் பிய்த்துகொண்டு ஓடிவிட்டது. அறுத்துக்கொண்டு ஓடிய ஒட்டகத்தைப் பிடிக்க முயன்ற உரிமையாளரை தலைமுடியை கடித்து மென்று துப்பிவிட்டது.

பாரம்பரிய முறையில் ஐந்து ஆண்களை மணந்த இமாச்சல் பெண்!

click me!