Chocolate day: சாக்லேட் தினத்துக்கு இப்படி ஒரு வரலாறா? இது சாக்லேட்டை விட தித்திப்பான விஷயமா இருக்கே!

By Ma RiyaFirst Published Feb 8, 2023, 8:23 PM IST
Highlights

Chocolate day: காதல் வாரத்தின் மூன்றாவது நாளான சாக்லேட் தின வரலாறு. சாக்லேட் தின வாழ்த்துகள், சாக்லேட் தின முக்கியத்துவம் முழுவிவரம்..!  

காதலை சுமந்தலையும் மனசுக்கு தினமும் காதலர் தினம் தான். ஆனாலும் உலகம் முழுக்க பிப்ரவரி மாதம் காதலர்களுக்காகவே ஒரு வாரம் சிறப்பிக்கப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர் வாரம் பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினத்துடன் (Rose day) தொடங்கியது. அதன் மூன்றாவது நாளான நாளை (பிப்.9) சாக்லேட் டே (Chocolate day) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, இதில் என்ன மாதிரியான பரிசுகள் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

சாக்லேட் தினத்தன்று தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பிடித்த சாக்லேட் பரிசளிக்க வேண்டும் என பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். அது உண்மைதான். ஆனாலும் வெறும் சாக்லேட் மட்டுமல்ல, நீங்கள் அன்பான வார்த்தைகளை சொல்வது அதை விட முக்கியம். உங்களின் அன்பான வாழ்த்தும், வார்த்தையும் உங்கள் துணையை மிகுந்த தித்திப்பில் ஆழ்த்தும். நாவில் எச்சில் ஊற வைக்கும் சாக்லேட் உணவுகள், சாக்லேட்டால் ஆன பரிசுகள் கூட துணைக்கு பரிசாக கொடுக்கலாம். 

தொடர்ந்து சாக்லேட் வாங்கி கொடுப்பதால் அன்பு அதிகமாகும். காதல் கை கூடும் என்பார்கள். அதாவது சாக்லேட் இருவரின் உறவுக்கு பாலமாக இருக்கிறதாம். இதன் காரணமாக சிலர் மனதுக்கு பிடித்த நபருக்கு சாக்லேட்டை வாரி இறைப்பார்கள். 

சாக்லேட் தின வரலாறு 

சாக்லேட் கொஞ்சம் கசப்பான சுவையை நாவில் கொடுத்தாலும், மென்று அதை உண்ணும்போது அலாதியான சுவைக்கு நம்மை இழுத்து சென்றுவிடும். அப்படி தான் காதலும் நம்மை மதி மயக்கிவிடும். சாக்லேட் ஒரு மனிதரை மகிழ்ச்சியாக மாற்றும் சக்தி உடையது என நம்பப்படுகிறது. 

உங்களுக்கு தெரியுமா? 19 ஆம் நூற்றாண்டில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் கோகோ வெண்ணெயைப் பயன்படுத்துவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தது. அதற்கான வழியை ரிச்சர்ட் காட்பரி என்பவர் கண்டுபிடித்தார். விக்டோரியன் காலத்தில், அந்த வித்தையை பயன்படுத்தி ரிச்சர்ட் கேட்பரி தயாரித்த சாக்லேட்டுகளை அவர் இதய வடிவிலான பெட்டிகளில் அடுக்கி, விற்க ஆரம்பித்தார். அந்த சாக்லெட் பெட்டிகளை காதலர் தினத்தையொட்டி கொடுக்கும் வழக்கம் அதன் பிறகு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம் முதலில் மொரோசாஃப் என்ற சாக்லேட் விற்பனையாளரால் வணிகரீதியாக தொடங்கப்பட்டதாம். 

சாக்லேட்டின் முதன்மை பொருளான கோகோ பீன்ஸ் பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. சாக்லேட்டை போலவே காதலும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதால் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் மொத்த சுவையும் இந்த தினத்தில் தான் உண்டு என்கிறார்கள். ஏனென்றால் ஒரு சாக்லேட் முழுநாளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்குமாம். 

சாக்லேட் தினத்தின் முக்கியத்துவம் 

ஒருவருக்கொருவர் சாக்லேட் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொள்வதால் அங்கு ஒரு உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படும். உலகம் முழுக்கவே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதற்கு வயதோ, பாலினமோ பாகுபாடில்லை. சாக்லேட் கொடுப்பதால் யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். மனச்சோர்வோடு இருப்பவரிடம், புன்னகையுடன் ஒரு சாக்லேட் கொடுத்து ஆதரவாக பாருங்கள். அந்த கனிவுதான் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. கனிவாக இருங்கள் காதலில்!! 

சாக்லேட் தின வாழ்த்துகள் 

  • உனக்கு முன் சாக்லேட்டுக்கு கொஞ்சம் சுவை குறைவுதான் தெரியுமா? தீர்ந்தே போகாத இனிமை நீ! சாக்லேட் தின வாழ்த்துகள். 
  • பகிர்ந்து கொள்ள நீ இருப்பதால் மட்டுமே சாக்லேட் இவ்வளவு இனிப்பாக இருக்கிறது. வாழ்வின் முக்கியமானவளுக்கு/ முக்கியமானவருக்கு சாக்லேட் தின வாழ்த்துகள். 
  • சாக்லேட் தினத்துக்கு உன் பேரை சூட்டியிருக்கலாம். உன் போல் இனிமை இல்லையடா/ டி. சாக்லேட் தின வாழ்த்துகள். 

இதையும் படிங்க: நடிகை ஐஸ்வர்யா ராய்கிட்ட அபிஷேக் எப்படி லவ் சொன்னாரு தெரியுமா? இப்படி சொல்லி ப்ரபோஸ் பண்ணுங்க!

click me!