காணும் பொங்கல் நாளில்...உங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வித்தியாசமான ஸ்நாக்ஸ்!

By manimegalai aFirst Published Jan 16, 2022, 10:53 AM IST
Highlights

சர்க்கரை பொங்கல், சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம்பிடிக்கின்றனவா? கவலை வேண்டாம். பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள்.

பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல், ஆண்டுதோறும் 4 நாட்கள் தமிழ் கலராசரத்தை போற்றும் விதமான மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா ஆண்டும் பொங்கல் திருநாளில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானிடம் வழிபட்டு உண்பது வழக்கம். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா என்கின்ற கொடிய நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, அதிக அளவிலான மன உளைச்சலை நம் அனைவரும் எதிர்கொண்டது வருகிறோம். இந்த தருணங்களை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு குழந்தைகளுக்கு பிடித்தமான, உணவுகளை செய்து அசத்துங்கள். இன்று பொங்கல் திருநாள் என்பதால், வித்தியாசமான உணவாக சாக்லேட் பொங்கல் செய்து கொடுங்கள்.

சர்க்கரை பொங்கல், சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம்பிடிக்கின்றனவா? கவலை வேண்டாம். பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு நாம் ஆரோக்கியமான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வதற்கு  சாக்லேட் பொங்கல் தேவையான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகின்றது.

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் பொங்கல்  வைப்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
பால் -  ஒன்றை கப் 

ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

நெய் - கால் கப்

முந்திரி, திராட்சை - தேவையான அளவு
 
வரகு அரிசி - 1 கப்

சிறுபருப்பு - கால் கப்

தண்ணீர்  - 2 கப்

கோகோ பவுடர் - கால் கப்

நாட்டு சர்க்கரை - 2 கப்

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு, ஒரு அகலமான கடாயில் நெய் ஊற்றி சிறுபருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். அடுத்து அதில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுத்து  தனியே எடுத்து கொள்ளவும்.

பிறகு, குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், வறுத்த பருப்புகளை போட்டு அதில் 1 கப் பால், 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து குக்கரை மூடி 3 விசில், 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து குக்கரை அணைக்கவும்.

பின்னர் அதே கடாயில் வேக வைத்த அரிசியை போட்டு பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து திக்கான பதம் வரும் வரை கிளறி விடவும். இடையிடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

கடைசியான வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். இதை நீங்கள் வீட்டில் இன்று ட்ரை பண்ணி பாருங்க உங்கள் குழந்தைகள் அடிக்கடி உங்களிடம் கேட்கும். கரோனா தொற்று காரணமாக நீங்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இந்த உணவு தயாரித்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-
 

click me!