சுய இன்பம் செய்வது நல்லதா... கெட்டதா? ஆய்வாளர்கள் சொல்லும் அட்வைஸ்!

manimegalai a   | Asianet News
Published : Jan 16, 2022, 09:28 AM ISTUpdated : Jan 16, 2022, 12:04 PM IST
சுய இன்பம் செய்வது நல்லதா... கெட்டதா? ஆய்வாளர்கள் சொல்லும் அட்வைஸ்!

சுருக்கம்

இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரும்பாலானோர் சுய இன்பத்திற்கு அடிமையாவதாக ஆய்வாளர்களின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆண்களோ, பெண்களோ இருவருமே சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சுய இன்பம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே பல முறை என வேறுபடும். ஒரு சிலர் தனது செக்ஸ் ஆசையை தீர்த்து கொள்ளவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். 

சுய இன்பம் செய்வதால் மனச்சோர்வு குறைகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான ஆண்கள் சுயஇன்பம் தவறாமல் செய்கிறார்கள். சுயஇன்பம் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும், குளிருக்கு இதமாக இருப்பதகாவும் கூறி வருகின்றனர்.

இதயத்தில் நல்லது சுய இன்பம் மூலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை அவர்களை அறியாமலேயே தேடிக் கொடுக்கின்றனர். சுய இன்பத்தில் ஈடுபடும் சமயத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது சுய இன்பம் அனுபவிப்பது என்பது ஒரு உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது. பல ஆண்கள் நல்ல தூக்கத்திற்காக சுய இன்பம் செய்கிறார்கள். சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் நம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும் என்பது பலரின் கருத்தாகும்.

 இருப்பினும், அதிகப்படியான கைப்பழக்கம் ஒரு சில விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சுய இன்பமும் மற்ற எல்லா வகையான போதைப்பொருட்களையும் போலவே, இது உற்பத்தித்திறன் குறைவதற்கும், உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்திற்கும் வழிவகுக்கும். அதிக கைபழக்கம் பின்பக்க முதுகு வலியை ஏற்படுத்தலாம். சுயஇன்பம் குறித்து கடுமையான குற்ற உணர்வு, கடுமையான மனநோய்களுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் அங்குள்ள ஆண்களில் 92 சதவீதம் பேரும், பெண்களில் 62 சதவீதம் பேரும் சுய இன்பம் அனுபவித்திருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர். 
இந்தியாவில் ஆண்களை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தியாவில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது அமெரிக்காவை ஒப்பிடுகையில் குறைவுதான். இதில், பெரும்பாலானோர் சுய இன்பத்தில் தங்கள் மன அழுத்தம் குறைவதாகவும் தெரிவித்துள்ளனர். 

சுய இன்பம் கொள்வது நல்லதா? கெட்டதா? என்பதை தாண்டி அளவோடு சுய இன்பம் செய்வதன் மூலமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி நீண்ட நன்மைகள் பெற முடியும்.

நீண்ட நேர சுய இன்பம் கொள்வதை தவிர்ப்பதற்கு சிறந்த ஒரு சில வழிகள்:

தனிமை தான் பலருக்கும் முதல் எதிரி. தனிமையில் இருக்கும் போது தான் சுயஇன்ப எண்ணங்கள் அதிகம் வரும். நீங்கள் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த வேலையை மேற்கொள்ளுங்கள்.   

மேலும், பல இயற்கையான முறைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம். யோகா, தியானம், மூச்சு பயிற்சி, மசாஜ் போன்றவை நல்ல பலன் தரும். மேலும் இவை உங்கள் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். எனவே ,மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியத்திற்கு இணங்க எதையும் அளவோடு செய்து மகிழ்வோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!