காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? சுற்றுலா தலங்களுக்கு தடை!

By manimegalai aFirst Published Jan 16, 2022, 8:28 AM IST
Highlights

சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி என்று கீழே தெரிந்து கொள்ளலாம்.

பொங்கல் திருநாள் நாளில், உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழ்வர். இந்த தை திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். முதல், நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தை பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும். இதில் குறிப்பாக, உறவுகளுடன் சேர்ந்து பீச், பார்க், போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கே அமர்ந்து, உண்டு மகிழ்வர். ஆனால், தற்போது காரனோ பரவல் உச்சத்தில் இருப்பதால் முன்னெச்சரிக்கையை கடைபிடிப்பது அவசியம் ஆகும். தமிழகத்தில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பண்டிகையையொட்டி நேற்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று கடற்கரை, நீர் நிலைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் மெரினாவை போன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அதன் மூலம் அங்கு கடை வைத்துள்ள சிறிய வியாபாரிகளும் பயன் அடைவார்கள். அவர்களும் இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, காணும் பொங்கல் திருநாளில்  காரனோ பரவல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் வைத்து நெருங்கிய உறவுகளில் தவிர்க்க முடியாத சிலரை மட்டுமே வீட்டிற்கு அழைத்து, கொண்டாடி மகிழ்வது சிறந்தது. மேலும், அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கைகைகளை கழுவுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

உடைகளில் ஒற்றுமை:

உங்கள் விருந்துக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை தேர்ந்தெடுத்து, அதன்படி ஆடை அணியுமாறு உங்கள் உறவினர்களைக் கேட்கலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களை ஒரே நிற உடைகள் போன்றவற்றை மேற்கொள்வது கூடுதல் அழகை தரும். இது பொங்கல் கொண்டத்தின் அழகை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆரோக்கியமான உணவு:
 
சுவையான உணவு மற்றும் பானங்கள் ஒவ்வொரு பண்டிகையின் போது முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு, கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆரோக்கியமான உணவுகளை சமைத்து பரிமாறலாம். உங்கள் உணவு பட்டியலில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காணும், பொங்கல் நாளில் ஆரோக்கியமான தானிய பொங்கல் வைத்து மகிழலாம்.

திட்டமிட்டு செலவழியுங்கள்:

இந்த ஆண்டு குறைவான நபர்களே உங்கள் வீட்டிற்கு வருகை தர வாய்ப்புள்ளதால் நீங்கள் குறைவான அளவிலேயே பணத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், இந்த கரோனா பரவல் கால கட்டத்தில் அதிபடியான செலவு உங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி காணும் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழுங்கள்!

 

click me!