சுகர், பிபி நோயாளிகளுக்கு உதவும்...காலை நேர உடற்பயிற்சி! ஒரே வாரத்தில் கிடைக்கும் பயன்கள்!

By manimegalai aFirst Published Jan 16, 2022, 7:25 AM IST
Highlights

சுகர், பிபி போன்ற இணை நோய்கள் கட்டுக்குள் வருவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள, உடற்பயிற்சிகளை பின்பற்றுவது அவசியம்.
 

இன்றைய நவீன உலகில், சர்க்கரை அல்லது நீரிழிவு  நோய் என்பது 40 வயதை கடந்த அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக தற்போது, மாற துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய கரணம் முறையான உடற்பயிற்சி இல்லாமை, மேற்கத்திய உணவு பழக்கவழக்கம், உடல் உழைப்பின்றி போவது போன்றவையாகும். இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் உள்ளது, அது அதிகப்படியான மன அழுத்தம் ஆகும். உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மில் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தம் கொஞ்ச நஞ்சம் இல்லை. பொருளாதார பின்னடைவு, வறுமை, கடன் பிரச்சனை, சமூக உறவில் நெருங்கி பழகாமை, போன்றவை நம்மில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அபரிமிதமானது. இதனால், இணை நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, சுகர், பிபி நோயாளிகளுக்கு வீட்டில் இருந்த படியே உதவும் உடற்பயிற்சிகள் ஏராளம். அவற்றின் சிறு பிரிவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை முறையாக பின்பற்றி வந்தால், நிச்சயம் ஒரு வாரத்தில் வித்தியாசம் தெரியும், சுகர், பிபி போன்ற இணை நோய்கள் கட்டுக்குள் வரும். தொடர்ந்து முத்திரை செய்தால் சுகர் வராமல் சுகமாக வாழலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு, இன்சுலின் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும்.  இன்சுலின் குறைந்தால் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறும். இதனையே நீரிழிவு, சுகர், சர்க்கரை வியாதி, டயாபடீஸ் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.

இந்தக் கணையம் ஒழுங்காக இயங்க உணவில் ஒழுக்கம், வாழ்வில் ஒழுக்கம் வேண்டும்.  அத்துடன் எளிய முத்திரை மூலம் கணையத்தை சிறப்பாக இயங்க செய்யலாம்.  நீரிழிவு உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த முத்திரைகளை பயிலுங்கள்.   

வருண முத்திரை: 

இவைகள் சாப்பாட்டிற்கு முன் மூன்று வேளை செய்யலாம். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். பின் கண்களை திறந்து சுண்டுவிரல் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் மூன்றும் தரையை நோக்கி இருக்கட்டும், இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் அப்படியே இருக்கவும்.  பிறகு மெதுவாக தங்களை ஆசுவாச படுத்திக்  கொள்ளவும்.

சுமண  முத்திரை செய்முறை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். பின், இரு கை விரல்களையும் திருப்பி படத்தில் உள்ளதுபோல் சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் நகங்கள் ஒன்றையன்று தொடட்டும். கட்டைவிரல் மட்டும் மேல் நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள்  சாப்பாட்டிற்கு முன் மூன்று வேளை பயிற்சி செய்யவும்.

உணவு முக்கியமான ஒன்று:

பசிக்கும் பொழுது பசியறிந்து நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். முருங்கை கீரை வாரம் ஒரு நாள் சாப்பிடவும். நாவல் பழக்கொட்டையை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து வாரம் இரு நாட்கள் சாப்பிடவும்.  கொய்யாப்பழம் ஒன்றை சிறு துண்டுகளாக்கி ஒரு பாட்டிலில்  தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை மட்டும் குடிக்கவும். பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி உடலுக்கு நல்லது. எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வாழ்த்துக்கள்!

click me!