குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு... ஓர் இனிப்பான செய்தி!

manimegalai a   | Asianet News
Published : Jan 16, 2022, 10:07 AM IST
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு... ஓர் இனிப்பான செய்தி!

சுருக்கம்

எந்த கலப்படமும் இல்லாமல், இயற்கை நம் குழந்தைகளுக்கு அளித்த ஆரோக்கியம் தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த உணவு பொருள்  தாய்ப்பால் ஆகும்.

எந்த கலப்படமும் இல்லாமல், இயற்கை நம் குழந்தைகளுக்கு அளித்த ஆரோக்கியம் தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த உணவு பொருள்  தாய்ப்பால் ஆகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். இன்றைய நவீன உலகில், தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். இது தொடர்பாக சர்வதேச அளவில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன என்று தெரியவந்துள்ளது. எனவே, நம் அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது. 

குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி:

பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது. ஆகவே, தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எவ்வளவு நன்மை ஏற்படும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் உபாதைகளிலிருந்து மீள்வதற்கு உதவும்:

தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது. பழைய நிலையை அடைய உதவும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய தாய்ப்பால் உதவுகிறது.  

இரத்த இழப்பை சரிசெய்யும் தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. மாதவிடாயை தாமதப்படுத்தும் தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாமதிக்கிறது. உளவியல் ரீதியான பிணைப்பு தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும். 

உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்:

சுயமரியாதை அதிகமாகும் தாய்ப்பால் கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய மரியாதையை ஊக்குவிக்கிறது. எளிமையான வேலை தாய்ப்பால் புகட்டுவதால் உணவு வழங்கும் உபகரணங்களை கழுவி, சுத்தப்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

உடல் எடை குறைய மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது:

 குழந்தைக்கு செயற்கையாக ஆரோக்கிய உணவுகள் புகட்ட முற்படுதல் அதிக செலவை ஏற்படுத்தும். மேலும், அது சராசரி குடும்ப செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு பிடிக்கும். புற்றுநோயை தடுக்கும் தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. எடை குறைய உதவும் தாய்ப்பால் குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்கள் உடலில் எடை இழக்கவும் உதவுகிறது.   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்