விடுமுறையில் இந்த இடங்களுக்கு போனா மன நிம்மதி கிடைக்கும்!

Published : May 17, 2025, 05:44 PM IST
budget travel destinations abroad for Indians

சுருக்கம்

கோடை விடுமுறையில் மன நிம்மதியாக இருக்க பயணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் எங்கு செல்வது என்று தெரியவில்லையா? இந்த பதிவு உங்களுக்கானது.

Travel Can Heal Your Body And Soul : நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் சோர்வு வருவது பொதுவானது. எனவே, மன அமைதிக்காக விடுமுறை நாட்களில் பயணம் செல்வதை பலர் விரும்புகிறார்கள். விடுமுறைக்குப் பிறகு உடல் மற்றும் மன அமைதியுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நோக்குத்துடன் பயணிக்கும் இந்த குறிப்பிட்ட போக்கு மக்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் யோகா, ஆயுர்வேத சிகிச்சை, தியானம் போன்றவை அடங்கும்.

ஆரோக்கிய ஓய்வு மையம்?

இந்தியாவில் எண்ணற்ற ஆரோக்கிய ஓய்வு மையங்கள் இருக்கிறது. இதில் அரசு மற்றும் ஆடம்பரமான தனியார் மையங்களும் அடங்கும். பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப அவற்றை தேர்ந்தெடுக்கலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயுர்வேதம் மற்றும் அவற்றின் உள்ளூர் பண்டை மருத்துவ நடைமுறைகளுடன் சேர்ந்து இத்தகைய மையங்களை ஊக்குவிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் ஆரோக்கிய ஓய்வு மையத்திற்கு மிகவும் பிரபலம் என்று இங்கு பார்க்கலாம்

இந்தியாவில் இருக்கும் பிரபலமான சில ஆரோக்கிய ஒய்வு மையங்கள்:

1. கேரளா - தென்னிந்தியாவில் இருக்கும் இந்த மாநிலம் கடந்த சில ஆண்டுகளில் ஆரோக்கிய ஒய்வு மையத்திற்கு மிகவும் பிரபலம். கொச்சி ஆலப்புழாவில் ஏராளமான ஆயுர்வேத ரிசார்ட்டுகள் உள்ளன. இங்கு உங்களுக்கு விருப்பமான நாட்களில் மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் இருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சைகள், போதை நீக்கம், ஸ்பா, தளர்வு போன்றவை இதில் அடங்கும்.

2. கோவா - இந்த பகுதி யோகா பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய ஓய்வு பெறுவதற்கு பிரபலமானது இங்கு பல்வேறு யோகா பயிற்சி மையங்கள், ரிசார்ட்டுகள் வருடம் முழுவதும் திறந்து இருந்தாலும் குளிர்காலத்தில் அவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். உடல் மற்றும் மன அமைதிக்காக வித்யாசமான விடுமுறை அனுபவிக்க விரும்பினால் இது சிறந்த தேர்வாகும்.

3. ரிஷிகேஷ் - உத்ரகாண்டில் இருக்கும் இந்நகரத்தின் அழகிய சூழல் யோகா மற்றும் தியானம் செய்வதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு பயிற்சி செய்தால் உங்களது மனம் அமைதியடையும். மேலும் ஆற்றங்கரையோரம் பிரபலமான பல ஆரோக்கிய ரிசார்ட்டுகள், ஆசிரமங்கள் யோகா மற்றும் தியானம் கற்பிக்கும் பயிற்சி மையங்களும் உள்ளன. கங்கை நதியோரம் இயற்கையின் சூழல் மற்றும் மலையின் அழகிய காட்சி இந்த நகரத்திற்கு வரும் பயணிகளுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை அளிக்கிறது.

4. தர்மசாலா மற்றும் மெக்லியோட் கஞ்ச் - இந்த இரண்டு இடங்களும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ளன. இப்பகுதிகல் இயற்கையான அழகு, புத்த மதத்தின் ஆன்மீக சூழல் நிறைந்துள்ளன. விசேஷம் என்னவென்றால், தலாய் லாமாவின் ஆசிரமம் இங்குதான் உள்ளது. தியானம், திபெத்திய மருத்துவம், புத்த தத்துவ பாடங்கள் இங்கு உள்ளன. பல்வேறு சிகிச்சை மற்றும் தியான மையங்களும் இருக்கிறது.

5. லே - இந்த பகுதி இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கைச்அழகால் நிறைந்துள்ள இந்த பகுதி பண்டைய திபெத்திய மருத்துவம் மற்றும் புத்தகத்திற்கான பிரபலம். சொல்ல போனால் பாசிலத சூழல் தியானம் யோகா மற்றும் சிகிச்சை பெறுவதற்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்.

குறிப்பு : இந்த விடுமுறையில் உங்கள் உடல் மற்றும் ஆரோக்கியத்தை புதுப்பிக்க விரும்பினால் மேலே சொன்ன இடங்களில் ஏதாவது ஒன்றில் உங்களது ஆரோக்கிய பயணத்தை தொடங்குங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்