
Tech Entrepreneur Mona Patel in Met Gala 2025 : 2025 மெட் காலா ஆடை கண்காட்சி நிகழ்ச்சியானது நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் (Metropolitan Museum of Art)) நடந்தது. இதில் உலகெங்கிலும் இருந்தும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த நடிகர் ஷாருக்கான், நடிகை கியாரா அத்வானி, ஈஷா அம்பானி போன்ற இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில், மோனா படேல் அணிந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான பிரபலங்கள் தங்களது கழுத்து மணிக்கட்டில் வைரங்களை அணிந்திருந்த நிலையில், இந்திய தொழில் அதிபர் மோனா படேல் 1,000 கேரட் மரகத வெட்டு வைரங்கள் கயிற்றில் ஒரு ரோபோ நாயுடன் மெட்டில் தனது பிரம்மாண்டமான நுழைவை அவர் கொடுத்தார்.
உண்மையிலேயே, தனித்துவமான தாம் பிரவுன் கோர்செட்டில் படேல் ஈர்க்கப்பட்டார். அவரது உடையின் பின்புறத்தில் ஒரு இயந்திர முதுகெலும்பும் இருந்தது. இது அவரது உடைக்கு ஒரு சிறப்பை கொடுத்தது. மேலும் அவர் அணிந்திருந்த தொப்பி அவரது தோற்றத்தை இன்னமும் மெருகேற்றியது. முக்கியமாக மோனாவின் முழு தோற்றத்தையும் ஒன்றாக சேர்க்கும் வகையில் அவர் அணிந்திருந்த காலணி இருந்தது.
யார் இந்த மோனா படேல்?
குஜராத்தின் வதோதராவில் பிறந்த இவர் நடிகையையோ, மாடலோ அல்ல. அவர் ஒரு பில்லியனர். ஆம், படேல் இந்திய தொழில்நுட்ப முதலீட்டாளர், தொழில்முனைவோர் மற்றும் சுகாதாரம் மற்றும் AI முழுவதும் பல நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.
இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக உலகளாவிய சந்தைகளில் பல வெற்றிகரமான வணிகங்களை நிறுவியுள்ளார். ஹார்டுவேர், ஸ்டான்போர்ட் மற்றும் MITயில் கல்வி பயின்றவர்.
பாலின சமத்துவத்திற்கான ஆதரவாளரான படேல் couture for cause என்று லாப நோக்கமற்ற அமைப்பை நிறுவியினர் இதன் மூலம் கல்வி சுகாதார வளங்களை அணுகுவதன் மூலம் உலக அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்த அமைப்பு இதுவரை 4000க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
2021 ஆம் ஆண்டு மோனா படேல் ஃபோர்ப்ஸின் தி நெக்ஸ்ட் (Forbes the next)-ல் 1000 பட்டியலில் பட்டியலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.