
அதிரடியாக உயர்ந்தது ரயில் கட்டணம்..! நள்ளிரவு முதல் அமல்..!
ஏசி வசதி கொண்ட ரயில் பெட்டிகளுக்கான கட்டணம் உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
கிலோமீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் மெயில்களில் கிலோமீட்டருக்கு 2 காசுகள் வீதமும், ஏ.சி வகுப்பறையில் கிலோமீட்டருக்கு நான்கு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி(2020) முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புறநகர் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை என்றும் சாதாரண பெட்டிகளுக்கு கட்டண விகிதம் ஒரு பைசா மட்டுமே உயர்வு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.