மனிதரின் வாழ்வோடு கலந்த பொங்கல் திருநாள்!

By manimegalai aFirst Published Dec 31, 2019, 7:47 PM IST
Highlights

பொங்கல் திருநாள் மற்ற கொண்டாட்டங்களை விட மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக, மனிதனின் வாழ்க்கையோடு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒரு திருவிழா என்றால் அது பொங்கல் தான்.
 
பொங்கல் திருநாள் மற்ற கொண்டாட்டங்களை விட மிகவும் வித்தியாசமானது. குறிப்பாக, மனிதனின் வாழ்க்கையோடு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒரு திருவிழா என்றால் அது பொங்கல் தான்.

ஐந்து பூதங்கள் இணைத்த வாறு... மண் பானையில், தண்ணீர் ஊற்றி, ஆகாயத்தை பார்த்தபடி தெருவில் அடுப்பு வைத்து, இயற்கை காற்றின் நடுவே, நெருப்பு மூட்டி பொங்கல் வைத்து அதனை சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக புத்தரிசி பொங்கலை படைத்தது குடும்பதோடு உண்டு மகிழ்கின்றனர் உழவர்கள்.

மேலும், அரிசியை விளைக்க உறுதுணையாக இருந்த, மாடு, கலப்பை, போன்றவற்றை மாட்டு பொங்கல் அன்று படைப்பார்பார்கள். 

இந்த நாளில், மாடுகளை மனிதர்கள் அவர்கள் வீடு தெய்வமாகவே போற்றி, அதற்கு தூபம் காண்பித்து, மாலை போட்டு வழிபாட்டு, பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள். இப்படி பல்வேறு அம்சங்களும், இயற்கையோடு கலந்தே இந்த திருவிழா மனிதனால் கொண்டாட படுகிறது.

click me!