டிரெயின் – 18 !! விமானத்தை மிஞ்சும் சொகுசு ரயில்… செப்டம்பரில் வெள்ளோட்டம்…என்ஜின் இல்லா முதல் ரயில்… சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்று…

By Selvanayagam PFirst Published Aug 24, 2018, 2:11 PM IST
Highlights

சென்னை  பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கே பெருமையான விஷயமாக கருதப்படுவது டிரெயின் 18 தான். விமானத்தை மிஞ்சும் அதி சொகுசு ரயிலான டிரெயின் -18 தற்போது தயாரித்து முடிக்கப்பட்டு வெள்ளோட்டத்துக்கு ரெடியாக உள்ளது. அப்படி என்ன இந்த ரயிலின் சிறப்பு ?

2018 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்படவுள்ளதால் இந்த ரயிலுக்கு  டிரெயின் -18 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்  இந்த ரயில்தான் இந்தியாவிலேயே அதிவேக ரயில் என கூறப்படுகிறது.

இந்த ரயில் இரு புறமும் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த பருவநிலையிலும் அதாவது மழை, வெயில் தீ விபத்து போன்ற எதிலும் உருக்குலையாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, புஷ்பேக் வசதி கொண்ட நவீன இருக்கைகள், தானியங்கிக் கதவுகள், நகரும் படிக்கட்டுகள், 24 மணி நேர இலவச Wi-Fi, ஜிபிஎஸ், அதி நவீன வேக்குவம்(Vaccuam)  டாய்லெட் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பயணித்தால் ஒரு விமானத்தில் செல்லும்போது எத்தகைய உணர்வு ஏற்படுமோ அது போன்ற ஓர் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். பிரதமர் மோடியின் Make in India  திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க இந்திய தொழில் நுட்பத்திலேயே சென்னை ICF  தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டத்துக்கு ரெடியாக உள்ளது.

பயணிகளுக்கான வசதிகள் மட்டுமல்லாமல் அவர்களது பாதுகாப்பையும் டிரெயின் 18 உறுதி செய்கிறது. பயணிகளுக்கான சிறப்பைப் போலவே இந்த ரயிலை இயக்கும் திறனிலும் பல்வேறு புதிய அம்சங்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பெட்டியின் கீழும் 8 இயக்கும் மோட்டார்கள் , குளிர்ந்த காற்றை ரயில் முழுவதும் சீராக பகிர்ந்தளிக்கும் கூரை, எவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் உடனே ரயிலை நிறுத்த தேவையான டிஸ்க்பிரேக், ஒரு பெட்டியில் இருந்து அடுத்த பெட்டிக்கு செல்லக் கூடிய வெஸ்டிபிள் சிஸ்டம் போன்ற பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளும் டிரெயின் – 18 ல் உள்ளன.

ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும் 8 மோட்டார்களின்  செயல்பாட்டின் மூலம் 50 % முழு வேகத்தையும், அதே நேரத்தில் நேர்த்தியான கட்டுப்பாட்டையும் இந்த ரயில் கொண்டுள்ளது.

இந்த ரயிலில் மொத்தம் 16 கோச்சுகள் உள்ளன. அதில் 2 Executive  கோச்சுகளும், 14  Non-Executive  கோச்சுகளும் அமைக்கப்பட்டள்ளன. Executive  கோச்சுகளில் 56 இருக்கைகளும், ளும், Non-Executive  கோச்சுகளல் 78 இருக்கைகளும் உள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல, தற்போது இந்த டிரெயின் -18 சென்னை ICF  தொழிற்சாலையில் தயாராக உள்ளது. அடுத்த மாதம் டிரெயின் -18 வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. தற்போது இயக்கப்படும் சதாப்தி அதிவேகரயிலுக்கு மாற்றாக இந்த டிரெயின் -18 இருக்கும் என தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.

இந்த புதிய பல வசதிகக் கொண்ட ரயிலுக்காக பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் டிரெயின் – 18 ஐத் தொடர்ந்து முழுவதும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்படும் டிரெயின் – 20 தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!