இஞ்சி தொக்கு இப்படி ஒரு நன்மையை தருகிறதா...?

By thenmozhi g  |  First Published Aug 22, 2018, 6:59 PM IST

இஞ்சி தொக்கு நம் உடலுக்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. குறிப்பாக இஞ்சித்தொக்கு அனைத்து வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும். 

இஞ்சி தொக்கு இப்படி ஒரு நன்மையை தருகிறதா...? 

இஞ்சி தொக்கு நம் உடலுக்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. குறிப்பாக இஞ்சித்தொக்கு அனைத்து வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும். 

Latest Videos

undefined

தேவையான பொருள்கள் 

இஞ்சி - 100 கிராம்
புளி 
சிறிதளவு வெல்லம் 
மிளகாய் தூள் 
2 மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள் 
அரை தேக்கரண்டி
உப்பு 
தேவைக்கு
கடுகு
தனியா
வெந்தயம்

கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - இவை அனைத்தையும் தாளிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை : 

இஞ்சியை நன்கு தோல் நீக்கி துருவிக் எடுத்துக்கொண்டு, புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நன்கு கிளறி இறக்கி ஆற விடவும். ஆறியதும் கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

click me!