ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்குவதற்கும், அதை பராமரிப்பதற்கும் நல்ல முயற்சி மற்றும் சிறந்த புரிதல் மிகவும் அவசியம். ஆனால் உங்கள் காதல் உறவை அல்லது உங்களுக்கு நெருங்கிய உறவுகளை சரிவர கவனிக்கவில்லை என்றால் சிறிய தவறுகள் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் உறவை, காதல் வாழ்க்கையை நாசம் செய்யும் சில தவறான பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
கவனச்சிதறல்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கவனச்சிதறல்கள் என்பது சர்வசாதாரமனாக பலரிடமும் இருக்கின்ற ஒரு அடிப்படை குணம். ஆனால் காதல் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஒரு குணமிது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் காதல் துணையோடு நீங்கள் நேரத்தை செலவிடும்போது, உங்கள் கவனம் சிதற பல வாய்ப்புகள் உள்ளது, ஆனால் நமக்காக உயிருள்ள ஒரு ஜீவன் அதே கவன சிதறல்களை தள்ளிவைத்து விட்டு நம்மோடு அமர்ந்திருக்கும்போது நமக்கு கவனச்சிதறல் ஏற்படுவது நம் காதல் வாழ்க்கையை கெடுக்கும். ஆகவே உங்கள் துணையோடு நேரத்தை செலவிடும்போது செல்போன் போன்ற பிற பொருட்களை ஒதுக்கி வைப்பது நல்லது.
undefined
விமர்சனம்
நமது காதல் துணையை விமர்சித்து பேசுவது ஒருவகையில் நல்ல செயலக இருந்தாலும், அதையே வழக்கமாக கொண்டிருந்தாள் நம் காதல் வாழ்க்கை முறிவில் தான் பொய் முடியும். தொடர்ச்சியாக உங்கள் துணையிடம் ஏதோ ஒரு தவறை கண்டறிவதும், அதைச் சுட்டிக்காட்டுவதும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே எதிர்மறையான இயக்கத்தை உருவாக்கும். ஆக்கபூர்வமான கருத்துக்கும், பாராட்டுக்கும் இடையில் சமநிலையை நீங்கள் பராமரிப்பது அவசியம். உங்கள் துணையை நீங்கள் ஏன் நேசிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் அவர்களின் நேர்மறையான பண்புகளிலும் கவனம் செலுத்துங்கள்.
எச்சரிக்கை: பச்சை குத்தும் மை ஆபத்தாம்! தெரிஞ்சிக்க இதை கண்டிப்பாக படியுங்கள்…!!
ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்குதல்
ஒரு ஆரோக்கியமான உறவு ஒத்துழைப்பால் மட்டுமே வளர்கிறது, மாறாக போட்டியால் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் துணையை குறித்தும், அவருடைய நடவடிக்கை குறித்தும் தவறாக நிரூபிக்க தொடர்ந்து முயற்சிப்பது, பதற்றத்தையும் மனக்கசப்பையும் உருவாக்குகிறது. போட்டிபோட இது விளையாட்டு களம் அல்ல. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பழகுங்கள்.
யதார்த்தமே இல்லாத எதிர்பார்ப்புகள்
உங்கள் துணை, உங்கள் மனதை அப்படியே படித்து செயல்படும் ஒரு இயந்திரமாக பார்க்கக்கூடாது, அது முற்றிலும் நியாயமற்றது. உங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியது அவசியம். உங்கள் துணைக்கு அது தெரியாவிட்டால் அவர்களால் உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும். தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத எதிர்பார்ப்புகளைத் தடுக்க உங்களை அடிக்கடி வெளிப்படுத்துங்கள். மனம் திறந்து பேசுங்கள், நல்ல உரையாடலில் ஈடுபடுங்கள்.
“இதுக்கு பேசாம சிங்கிளாவே இருந்திருக்கலாம்” திருமணமான நபர்களின் புலம்பலுக்கு என்ன காரணம்?