என்ன ஒரு கொடுமை..! தக்காளியை வாங்க யாரும் வராததால் ஏரியில் கொட்டி கண்ணீர் சிந்தும் விவசாய பெருமக்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 06, 2020, 07:33 PM IST
என்ன ஒரு கொடுமை..! தக்காளியை வாங்க யாரும் வராததால் ஏரியில் கொட்டி கண்ணீர் சிந்தும் விவசாய பெருமக்கள்..!

சுருக்கம்

தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போது வியாபாரிகள் தக்காளியை வாங்க மறுத்து உள்ளனர். இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் ட்ராக்டர், டெம்போ மூலம் அதிகப்படியான விளைச்சல் கொண்ட தக்காளியைக் கொண்டு வந்து ஏரியில் கொட்டி சென்றுள்ளனர்.

என்ன ஒரு கொடுமை..! தக்காளியை வாங்க யாரும் வராததால் ஏரியில் கொட்டி கண்ணீர் சிந்தும் விவசாய பெருமக்கள்..! 

தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதாலும், யாரும் வாங்க முன்வராததாலும் ஏரியில் கொட்டி சென்றுள்ளனர் விவசாயிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போச்சம்பள்ளி, அரசம்பட்டி, செல்லம்பட்டி என பல பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். சென்ற மாதம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக இந்த வெவ்வேறு கிராமங்களிலிருந்து பெருமளவிற்கு தக்காளியை கொள்முதல் செய்து அங்கிருந்து மதுரை சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி அனுப்பப்பட்டது.

ஆனால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போது வியாபாரிகள் தக்காளியை வாங்க மறுத்து உள்ளனர். இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் ட்ராக்டர், டெம்போ மூலம் அதிகப்படியான விளைச்சல் கொண்ட தக்காளியைக் கொண்டு வந்து ஏரியில் கொட்டி சென்றுள்ளனர். மேலும் ஒரு சில தோட்டங்களில் அறுவடை செய்யாமலேயே கால் நடைகளுக்கு உணவாக விட்டுவிட்டனர். அதேபோன்று முள்ளங்கி வியாபாரிகள் முள்ளங்கியை பறிக்காமல் அந்த நிலத்திற்கே உரமாக இருக்க ஏர் ஓட்டி   உள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Wooden Flooring: வீட்டை ராயலாக மாற்றும் 'வுட்டன் ஃப்ளோரிங்.. வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Graveyard dating : சுடுகாட்டில் காதல் செய்யும் Gen Z லவ்வர்ஸ்! என்ன கொடுமை சார் இது?