கொரோனா எதிரொலி..! தனிமைப்படுத்துவதற்கான இடமாக "சென்னையும்" தேர்வு..!

By ezhil mozhiFirst Published Mar 6, 2020, 6:05 PM IST
Highlights

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி  உள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்த அலுவலர்கள், மாணவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தபட்டு உள்ளது 

கொரோனா எதிரொலி..! தனிமைப்படுத்துவதற்கான இடமாக "சென்னையும்" தேர்வு..! 

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூட்டம்  கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

தற்போது வரை இந்தியாவில் 31 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளது.1,500 நபர்கள் வரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது 

அதன் படி தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக சென்னை, ஜெய்சால்மர், செகந்திரபாத், கொல்கத்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி  உள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்த அலுவலர்கள், மாணவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தபட்டு உள்ளது 

மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.ஊழியர்கள் வருகை பதிவேடுகளில் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

click me!