இந்த நேரத்தில் தக்காளியும் முக்கியம் தான் .....!!!

 
Published : Nov 11, 2016, 02:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
இந்த நேரத்தில் தக்காளியும் முக்கியம் தான் .....!!!

சுருக்கம்

இந்த நேரத்தில் தக்காளியும் முக்கியம் தான் .....!!!

தக்காளி  இல்லாமல்,  நாம் எதையாவது ருசியாக  சமைக்க  முடியுமா.....இல்லவே இல்லை.

அப்படிப்பட்ட  தக்காளியை  ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டும்போது, தக்காளியில் உள்ள என்சைம்கள் செயலிழக்கின்றன. இந்த என்சைம்கள்தான் நொதித்தலுக்கு உதவும். ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளியில் இருந்த என்சைம்கள் அப்படியே இருந்திருக்கிறது. இந்த ஒப்பீடுகளின் முடிவில் அந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த  ஆய்வானது 3  பிரிவுகளாக  பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் குழுவினர் :

தக்காளியை 5 டிகிரி செல்சியஸ், 92 சதவீதம் ஈரப்பதத்தில் ஏழு நாட்கள் வைத்திருந்தனர். அதன் பின்னர் ஒருநாள் மட்டும் 20 டிகிரி செல்சியஸ்க்கு, மாற்றி எட்டாம் நாள் ஆராய்ச்சி செய்தனர்.

இரண்டாவது குழுவினர்:

 தக்காளி சுற்றுப்புற வெப்பநிலை இல்லாமல் எட்டு நாட்கள் 5 டிகிரி செல்சியஸ் அளவில் குளிரூட்டி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

மூன்றாவது குழுவினர்:

 தக்காளி குளிரூட்டாமல் ஒருநாள் தாமதமாக ஒன்பதாம் நாள் ஆராய்ச்சி செய்தனர். இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குளிரூட்டப்பட்ட தக்காளியின் சுவை, என்சைம்கள் மற்றும் அதன் சத்து மூலக்கூறுகள் 65 சதவிகிதம் குறைகிறது.

தக்காளி என்ற பெயரில் வெறும் சக்கையை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறோம். இது தக்காளிக்கு மட்டுமல்ல, மற்ற காய்கறிகளுக்கும்தான். ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரியான் வாயு  பழங்களுடனும், காய்கறிகளுடனும் வேதிவினை புரிவதால் பழத்தின் தன்மை ஏறக்குறைய உடலுக்கு ஏற்ற தன்மையை இழக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்