12  மணிக்கு மேல்  நகை கடைகளில்  மட்டும் 500, 1000  ரூபாய்  ஏற்கப்பட்டது  எப்படி ..?

First Published Nov 10, 2016, 4:52 AM IST
Highlights


12  மணிக்கு மேல்  நகை கடைகளில்  மட்டும் 500, 1000  ரூபாய்  ஏற்கப்பட்டது  எப்படி ..?

நேற்று இரவு 500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என்ற  மோடியின் அறிவிப்பை தொடர்ந்து,

வீட்டில் கட்டுகட்டாக  வைத்திருந்த பணத்தை, ஒரு சில  கில்லாடி  முதலைகள்  இரவோடு  இரவாக தங்கமாக  மாற்றும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

அதாவது,  வங்கியில்  டெபாசிட்  செய்தால்,  பின்னர் கணக்கு  காண்பிக்க வேண்டும் என்பதால் , அந்த  பணத்தை எல்லாம் , தங்கம்  வாங்கு வதில்  காண்பித்தனர்.  இருப்பினும்  தங்கம்   வாங்குவதிலும்  சில  கெடுபிடிகள்  இருப்பதால்,  ஒரே குடும்பத்தை  சார்ந்தவர்கள்,  தனி  தனியாக  தங்கம்  வாங்கி உள்ளனர்.

அதெல்லாம்  சரி , 12  மணிக்கு மேல்  நகை கடைகளில்  மட்டும் 500, 1000  ரூபாய்  ஏற்கப்பட்டது  எப்படி ..?

அதாவது, மக்களுக்கு அவர்கள்  வைத்துள்ள  500 , 1000  ரூபாய்யை  , தங்கமாக  மாற்ற  வேண்டும்  என்பதில்  மட்டுமே  குறிக்கோளாக  இருந்ததை , உணர்ந்த தங்க நகைக்கடைகாரர்கள், செய்கூலி  சேதாரம்  என  எது சொன்னாலும்,   பூம் பூம்  மாடு மாதிரி, தலையாட்டி  , கருப்பு பணத்தை  கொடுத்து தங்கமாக  மாற்றியுள்ளார்கள் ஒரு சில  முதலைகள்.......

அதே சமயத்தில்,  நமக்கு  பணம்  கிடைத்தால் போதும் , தம்மிடம் உள்ள பணத்தை  “ நல்ல பணமாக கணக்கில்  காண்பித்து,  வியாபார நோக்கில் கொள்ளையடித்து  உள்ளார்கள்  நகை  கடை  உரிமையாளர்கள்......!!

இதனால, ஓவர்  நைட்ல , ட்ரம்ப் அதிபரான  மாதிரி,  ஒரே  ஒரு இரவில்  தங்கத்தின்  விலையில்  வரலாறு  காணாத   விலை  உயர்துள்ளது.......

எது எப்படியோ..... இந்த  விலை உயர்வால், எப்பொழுதம் பாதிக்கபடுவது,,,,,”  ஏற்கனவே  பாதிப்பில் இருக்கும்  நடுத்தர  மக்கள் மட்டுமே....என்பதில்  எந்த மாற்று  கருத்தும் கிடையாது........  

 

 

 

click me!