
அரசுக்கு எதில் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ, குடிமகன்களால் அதிக வருமானம் உண்டு. அதாவது மதுபான விற்பனையில் தான் அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதையே கூட பல குடிமகன்கள் பெருமையாக சொல்வது உண்டு “எங்களால் தான் நாடே வருமானம் அடைகிறது என கூறுவதை பலரும் காது குளிர கேட்டிருப்போம்
மது பானத்தை பொறுத்தவரையில், விஸ்கி, பிராந்தி, பீர், வைன் என்று பலவகை உண்டு. அந்தவகையில் இன்றுவிஸ்கி தினம் கொண்டாடப்படுகிறது.”விஸ்கி” என்ற வார்த்த கேலிக் என்னும் ஸ்காட்லாந்து மொழியிலிருந்து உருவானது என கூறப்படுகிறது. ஸ்காட்லாந்து மொழியில் விஸ்கு என்ற வார்த்தைக்கு வாழ்வின் நீர் என்று பொருள் என தெரிகிறது. அதாவது பாபிலோனியர்கள் காலத்திலேயே விஸ்கி இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
எத்தனை வகைகள் உள்ளது விஸ்கியில் ..?
இந்த விஸ்கியில் மால்ட் விஸ்கி, கிரைன் விஸ்கி, சிங்கிள் பாட் ஸ்டில் விஸ்கி, ரே விஸ்கி, போர்போன் விஸ்கி, டென்னிஸ்ஸீ விஸ்கி, கார்ன் விஸ்கி என்று கிட்டத்தட்ட 5000 வகையான விஸ்கி இருப்பதாக கூறப்படுகிறது.
விஸ்கி தினம் எப்படி தோன்றியது…?
மைக்கேல் ஜாக்சன் என்ற பெயர் கொண்ட விஸ்கி கலைஞன், பார்கின்சன் நோய் தாக்கி உயிரிழந்தார். அவரின் நினைவாக 2009ம் ஆண்டு நெதர்லாந்தில் உலக விஸ்கி தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் விஸ்கி தினத்தன்று பார்கின்சன் நோய்க்காக, விஸ்கி தினத்தன்று நிதி திரட்டப்பட்டு வருகிறது . அந்த நிதியை வைத்து பார்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.