பாகுபலி பிரபாஸ் உடற்கட்டமைப்பு பெற வேண்டுமா..? இதை செய்யுங்கள் போதும் நீங்களும் ஹீரோ தான்

 
Published : Mar 27, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
பாகுபலி பிரபாஸ் உடற்கட்டமைப்பு பெற வேண்டுமா..? இதை செய்யுங்கள் போதும் நீங்களும் ஹீரோ தான்

சுருக்கம்

if you like to look like baagubali pirabaas we must do this

பாகுபலி பிரபாஸ் உடற்கட்டமைப்பு பெற வேண்டுமா..? இதை செய்யுங்கள் போதும் நீங்களும் ஹீரோ தான்

பாகுபலி படத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்ற மிக சிறந்த படம். பாகுபலி படம் பார்க்காதவர்கள் கூட, பாகுபலி படத்தை பற்றி  பேசாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

பாகுபலி படத்திற்கு ஏற்ற காதாபாத்திரமான கதாநாயகன் பிரபாஸ், அவருடைய உடல் அமைப்பை   கதாபாத்திரத்திற்கு ஏற்ப எப்படியெல்லாம் தீவிர பயிற்சி எடுத்து மாற்ற வேண்டுமோ, அந்த அளவிற்கு முழு முயற்சியில்  இறங்கியுள்ளார்.

தற்போது பாகுபலி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை 15௦ கிலோ வரை உயர்த்துவதற்காக  தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சியை பற்றி இன்றைய இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் பேசி  வருகிறார்கள் .

பாகுபலி படத்தை பொறுத்தவரை 2 முக்கிய கதாபாத்திரங்கள். அதில் ஒன்று அப்பாவான பிரபாஸ் அதிக உடல் எடை கொண்டவராகவும், மகனாக வரும் பிரபாஸ் நல்ல  உடற்கட்டமைப்பை பெற்றவராகவும் தோற்றம் பெற வேண்டும்

பிரபாஸ் செய்யும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்கள்

காலை நேர சிற்றுண்டியாக 50 முட்டைகள்,

அரை கிலோ சிக்கன்

புரூட் சாலட்

அதிக அளவிலான வெஜிடேபில்ஸ்

தீவிர  பிரியாணி விரும்பியான  பிரபாசுக்கு, பிரியாணி சாப்பிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளாராம்  பயிற்சியாளர்  லக்ஸ்மன் ரெட்டி.

தற்போது 13௦ கிலோ வரை  எடை உயர்த்தியுள்ள  நிலையில் மேலும் 2௦ கிலோ வரை எடை உயர்த்த  தீவிர பயிற்சியில் உள்ளாராம் பிரபாஸ். இதற்காக தினமும் 5 முதல் 6 மணி வரை உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரபாஸ் என , அவருடைய பயிற்சியாளர் லக்ஸ்மன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒரே படத்தில் இருவேறு உடற்அமைப்புடன், தோற்றம் காண்பிப்பதற்காக, பிரபாஸ் மேற்கொள்ளும் இந்த  முயற்சியின் பலனை  திரையில்  காண்பதற்காக  பெருத்த எதிர்பார்ப்பில், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய தீவிர ரசிகர்கள்   

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!