“உலக இட்லி நாள்” கோலாகல ஏற்பாடு... 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை செய்ய திட்டம்...

 
Published : Mar 27, 2017, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
“உலக இட்லி நாள்” கோலாகல ஏற்பாடு... 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை செய்ய திட்டம்...

சுருக்கம்

world idli day on mar 31

“உலக இட்லி நாள்” கோலாகல ஏற்பாடு... 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை செய்ய திட்டம்...

இட்லி

இட்லி எந்த வகையில் நம் உடலிற்கு நல்லது என பல ஆய்வுகளை மேற்கொண்டு, இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களால் பொதுவாக விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடிய  ஒரு உணவு பொருள் இட்லி என்பதில் மாற்றம் இல்லை. இதனை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் நாள் உலக இட்லி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி உலக இட்லி நாளை முன்னிட்டு 2500 வகையான இட்லி செய்து உலக சாதனை படைக்க உள்ளார் 'மல்லிப்பூ இட்லி' புகழ் முனைவர் மு. இனியவன்.

இட்லி வகைகளில் சில :

காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, தட்டை இட்லி, மினி இட்லி, சேமியா இட்லி, பிரைடு இட்லி, டோக்லா போன்றவை தாண்டி இளநீர் இட்லி, பாதாம் இட்லி, பீட்ஸா இட்லி, புதினா இட்லி, ராஜா ராணி இட்லி, மெகா இட்லி என 2500 வகையான இட்லி தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க  உள்ளனர்.

சிறப்பு இட்லி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, முரசொலி மாறன், மனோரமா உருவ இட்லிகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

எங்கு எப்போது..?

பாரி முனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 05.00 மணிக்கு ( மார்ச்  29 )

இந்த இட்லி விழாவை காண பலரும் ஆர்வமுடம் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர் .

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!