குட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 11:42 AM IST
Highlights

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது. 

கொரோனா காலக்கட்டத்தில் தொழில் முடக்கம் நிலவியதால்,  முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விலையும் விண்ணத்தைத் தொட்டது.  பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் அதன் விலையிலும் அவ்வப்போது ஏற்ற, இறக்கங்களை காண முடிகிறது. 

இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

நேற்றைய  நிலவரப்படி காலை ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.29 குறைந்து, ரூ.4,238-க்கு விற்பனையானது. அதாவது சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ரூ.33,904க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37,032க்கு விற்பனையானது. மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் 168 ரூபாய் குறைந்து ரூ.33,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது. அதாவது சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து ரூ.33, 448க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

click me!