மனைவியிடம் மாட்டிக்கொண்டு "கதறும் ஆண்கள்"..! ஹெல்ப்லைன் நம்பர் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 21, 2020, 06:44 PM IST
மனைவியிடம் மாட்டிக்கொண்டு "கதறும் ஆண்கள்"..!  ஹெல்ப்லைன் நம்பர் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..!

சுருக்கம்

குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டிஜிபி ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்கள் மத்தியில் பெரும் கவலையை கொடுத்து உள்ளது. 

மனைவியிடம் மாட்டிக்கொண்டு "கதறும் ஆண்கள்"..!  ஹெல்ப்லைன் நம்பர் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..! 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த ஒரு தருணத்தில் மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த ஒரு நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும் அவர்களை பாதுகாப்பதற்காக ஒரு ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணை உருவாக்க வேண்டும் என ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வக்கீல் அருள் துமிலன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார் 

அதில் 

கொரோனாவிற்கு பயந்து ஊரடங்கு  காலத்தில் மக்கள்  வீட்டில்  முடங்கி  இருக்கின்றனர். இந்த நிலையில் குடும்ப வன்முறை காரணமாக மனரீதியாக ஆண்கள் அதிகளவில் பாதித்து உள்ளனர். எப்போதுமே பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை மட்டும் வைத்து பார்க்கப்படுவதால் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பல பெண்களால் கணவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

இப்படி நிலைமை இருக்கும் தருணத்தில், குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டிஜிபி ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்கள்  மத்தியில் பெரும் கவலையை கொடுத்து உள்ளது. ஆனால் வீட்டிற்குள் ஆண்கள் உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக பலரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை வெளியில் சொல்ல முடியாமலும்,புகார் அளிக்க முடியாமலும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த அறிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது, கொரோனா வைரஸை விட குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க ஒரு ஹெல்ப் லைன் தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது மக்கள் மத்தியில் ஒரு விதமான சஞ்சலப்பை ஏற்படுத்தினாலும், ஆண்களுக்க ஒரு ஆறுதலை தந்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்